15
July, 2026

A News 365Times Venture

15
Wednesday
July, 2026

A News 365Times Venture

பழனி கோயில் சொத்துகள் முறைகேடாக பத்திரப் பதிவு; சார் பதிவாளர் சஸ்பெண்ட்!

Date:

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் அடிவார பகுதியில்  கோயிலுக்கு சொந்தமாக 100 கோடி மதிப்பிலான  1.40 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலம் 1888 ஆம் ஆண்டு தண்டாயுதபாணி சுவாமி திருமடத்திற்கு பராமரிப்பு மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிலைத்தை விற்பனை செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலத்​தின் மூலம் கிடைக்கும் வரு​வாய் கோயில் கட்​டளைக்கு பயன்​படுத்​தப்​பட்டு வந்த நிலையில், காலப்​போக்​கில் இந்த நிலத்தை தனி​யார் சிலர் ஆக்​கிரமித்​தனர்.

இது தொடர்​பாக, பழநி தேவஸ்​தானம் சார்​பில் உயர் நீதி​மன்​றம், உச்ச நீதிமன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. வழக்கை விசா​ரித்த நீதி​மன்​றங்​கள், தண்​ட​பாணி சுவாமி மடத்​துக்​கு, பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில் இணை ஆணை​யரை தக்​காராக நியமித்ததுடன் இந்த நிலத்தை தேவஸ்​தானத்​துடன் இணைத்​தும் உத்​தர​விட்​டன.

பார்க்கிங்காக மாற்றப்பட்டுள்ள கோயில் நிலம்

இதையடுத்​து, தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்கு சொந்​த​மான 1.40 ஏக்​கர் நிலம், தக்​கார் மற்​றும் பழநி கோயில் இணை ஆணை​யரான மாரி​முத்து தலை​மை​யில் 60 ஆண்​டுகளுக்கு பிறகு கடந்த 2025 செப்.12-ம் தேதி மீட்​கப்​பட்​டு பழநி முரு​கன் கோயிலுக்கு வரும் பக்​தர்​களின் வசதிக்​காக இலவச வாகன நிறுத்​தமாக, பயன்​படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் , பழநி இணை சார் பதி​வாளர் மூலம் 6-ம் தேதி தண்​ட​யுதபாணி சுவாமிகள் மடத்​துக்கு சொந்​த​மான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து 100 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடிக்கு வெள்ளைதுரை, சேதுபதி ஆகியோர் பெயரில் முறைகேடாக பத்திர பதிவு செய்யப்பட்டது.

 இந்த பத்​திரப்பதிவை ரத்து செய்​யக் கோரி, பதிவுத்​துறை தலை​வருக்கு பழநி கோயில் இணை ஆணை​யர் மாரி​முத்து அறிக்கை அனுப்​பினார்.

பழனி திருக்கோயில்

இந்நிலையில் மோசடியாக பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலரான ஜஸ்டின் மணிகண்டன், ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார்பதிவாளராக பணியாற்றி இந்த பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நான் எந்தக் குற்றமும் செய்யாதவன்; நீதிமன்றத்தில் நீதியை எதிர்பார்த்து நிற்கிறேன்" – எ.வ.வேலு பேச்சு

சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முறைகேடு...

கரூர் மதியழகனுக்கு வாரியத் தலைவர் பதவி? – விருப்பப்பட்டு வழங்கும் முதல்வர் விஜய்?

தவெகவின் கரூர் மத்திய மாவட்டச் செயலாளரான மதியழகனுக்கு முக்கியமான வாரியம் ஒன்றின்...

ஓசூரிலேயே நிறுத்தப்படும் பெங்களூரு பேருந்துகள்; மேகதாது பிரச்னை எதிரொலி: இரு மாநில எல்லையில் பதற்றம்

மேகதாது பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட, கர்நாடக அரசு...