12
July, 2026

A News 365Times Venture

12
Sunday
July, 2026

A News 365Times Venture

"2026-ஐ போன்று 2031-லும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்"- We The Leaders மாநாட்டில் அண்ணாமலை

Date:

பாஜக முன்னாள் மாநில தலைவராக இருந்த அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘ We The Leaders’ என்ற இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார் .

அந்த இயக்கத்தில் லட்ச கணக்கானோர் இணைந்துள்ளனர். இந்நிலையில், இயக்கத்தின் சார்பில் தற்போது பொள்ளாச்சியில் ‘போதைப்பொருள் இல்லாத தமிழகம்’ என்ற மாநாடு நடைபெற்று வருகிறது.

அண்ணாமலை

இந்த இயக்கத்தின் முதல் மாநாடாக அமைந்துள்ளது. இதில் கலந்துகொண்டு பேசிய ‘ We The Leaders’ இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை, ” இது சாதரண நிகழ்வு அல்ல. இந்த மாநாட்டிற்கு வந்திருப்பவர்களை பார்க்கும்போது எதற்காக இந்த இயக்கத்தைத் தொடங்கினோமோ அதில் 50% தாண்டிவிட்டோம் என்று தன்னம்பிக்கை வந்துவிட்டது.

38 நாட்களில் 19 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருக்கின்றனர். நாம் யாரையும் கூப்பிடவில்லை. அவர்களே இணைகிறார்கள். இந்த அமைப்பைப் பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர்தான்.

ஆகஸ்ட்டில் நதிநீர் சுத்தம், செப்டம்பரில் பெண்கள் நலனுக்கான மாநாடுகளை நடத்த இருக்கிறோம். 6 மாத காலம் மக்களின் 6 முக்கியமான பிரச்னைகளை பேசப்போகிறோம். அதற்கான இலக்கு நம்மிடம் தெளிவாக இருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

நல்லவர்கள் பணி செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்பு இங்கு வழங்கப்படும். எத்தனை ஆண்டுகள் இந்த அமைப்பு இருக்கிறதோ அதுவரை போதை பொருள் ஒழிப்பு மாநாடு நடக்கும். 2026-ஐ போன்று 2031-லும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். இன்னொரு கட்சியை திட்டுவதற்கு தலைவர்களைக் குறைக் கூறுவதற்கான மாநாடு இது அல்ல. மூர்க்கமான அதிகார பசி எங்களுக்கு இல்லை. ” என்று பேசியிருக்கிறார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"கூட்டணியிலிருந்தும் தவெக அரசைக் கடுமையாக விமர்சிப்பதற்குக் காரணம் இதுதான்" – ஆதவன் தீட்சண்யா

'''தீக்கதிர்' நாளிதழுக்கு அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் சந்தா செலுத்திய செய்தியைக்...

பெங்களூரு: “சில்லறை இல்லை…'' – அமைச்சரையே பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர்!

பெங்களூரு மாநகரப் பேருந்துகளில் பொதுமக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்னைகளைக் கண்டறிய, கர்நாடக...

விசிக: “அப்படி கூறுபவர்கள் நம்மை அடிமையாகவே பார்க்கிறார்கள்" – திருமாவளவன் காட்டம்

விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில், திருவண்ணாமலையில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு...

'நான் சிங்கப்பூருக்கு ஓடி, ஒளிந்துவிட்டேனா?' – முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு எ.வ.வேலு பதிலடி

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவர் தொடர்பு உடையவர்களின் வீடுகளில் கடந்த...