9
July, 2026

A News 365Times Venture

9
Thursday
July, 2026

A News 365Times Venture

'நோபல் பரிசு கொடுக்கலாம்'- திமுகவுடன் நட்பு தொடரும் என்ற திருமாவின் கருத்துக்கு வைகோ பளிச் பதில்

Date:

விசிக விருது வழங்கும் விழா சென்னையில் ஜூலை. 5 ஆம் தேதி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், “திமுக தலைமையிலான கூட்டணியில் விசிக இல்லை என்பதை திமுக தலை​மையே அறி​வித்​து​விட்​டது.

இது​வரை நான் அறிவிக்​க​வில்​லை. தவெக கூட்​ட​ணி​யில் இருக்​கிறோமோ என்றும் அறிவிக்​க​வில்​லை. ஒரு​வேளை தவெக தலை​மை​யில் கூட்​டணி உருவா​னால், அதில் இடம்​பெறுவோம் அதில் எந்த ஐயமுமில்​லை.

திருமாவளவன்

திமுக தலை​வர்​கள் அனை​வரும் ஒன்​று சேர்ந்து விசிக​விலிருந்து ஒரு​வரை அழைத்து கட்​சி​யில் இணைத்​த​போது, திமுக தலை​மையே எங்​களு​டன் உறவு இல்லை எனச் சொல்​லி​விட்​டது. விசிக​வுடன் கூட்​டணி இல்லை என்று சொன்னது மு.க.ஸ்டா​லின் தான்” என்று பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று (ஜூலை. 7) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “அமைச்சரவையில் சேர்ந்த உடனேயே நாங்கள் இன்னொரு கூட்டணியில் சேர்ந்துவிட்டோம் என்று பொருளில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு தான் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். அந்த வகையில் திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது. விசிகவில் அதிருப்தி அடைந்து விலகிய முன்னணி பொறுப்பாளரை திமுகவில் இணைத்தது எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது” என்று பேசியிருந்தார்.

வைகோ
வைகோ

இந்நிலையில் இன்று (ஜூலை. 7) கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் திருமாவளவன் திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது என்று பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருக்கிறார்.

தொடர்ந்து அமைச்சர் கீர்த்தனா குறித்த கேள்விக்கு, ” எனக்கு அந்த சம்பவம் குறித்த முழுவிவரம் தெரியாது. எதை வேண்டுமானாலும் சொல்லி இந்த சர்க்கார் மீது பாயலாம் என்று நினைக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"திரைக்கவர்ச்சிக்குப் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் அரசுப்பணி கிடைக்குமென்றால்.?" – சீமான்

நாளை கரூர் செல்லும் முதல்வர் விஜய் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த...

ஈரான் துறைமுகம், விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 'ட்ரம்ப் உத்தரவின் பேரில்' என விளக்கம்

அமெரிக்கா, ஈரான் இடையே மீண்டும் போர் தொடங்கியுள்ளது. கடந்த ஜூன் 17-ம்...

"அவர்கள் பொய்யர்கள்; ஈரான் போர் நிறுத்தம் முடிந்துவிட்டது" – ட்ரம்ப் அதிரடி பேச்சில் சொல்வதென்ன?

கடந்த ஜூன் 17-ம் தேதி, ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்...