6
July, 2026

A News 365Times Venture

6
Monday
July, 2026

A News 365Times Venture

“ஆத்திரத்தில் அதிமுக-வை உடைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது தவெக!" – அப்பாவு சொல்வது என்ன?

Date:

சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெக ஆதரவு அதிமுக அணி ஒன்று உருவானது. அந்த அணியை முதல்வர் விஜய் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக பிரிந்து, பின் இணைந்தது. ஆனால், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் அதிமுக முக்கியப் பிரமுகர்கள் தொடர்ந்து தவெக-வில் இணைந்து வருகின்றனர். அதன் அடிப்படையில், நேற்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று த.வெ.க-வில் இணைந்தனர்.

சி.வி.சண்முகம் வீட்டில் விஜய்

இது தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திமுக தலைவர் முயற்சி செய்கிறார் என்று திட்டமிட்டு சிலர் விஷம பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள். தேர்தல் முடிவுகள் வந்த மறுகணமே நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம், த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு திமுக முட்டுக்கட்டை போடாது என்று சொன்ன வார்த்தையை திமுக தலைவர் இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.

ஆனால் நடந்த உண்மை தேர்தல் முடிவுகள் வந்த நாள் இரவே அதிமுகவின் ஆதரவை த.வெ.க கோரியதாகவும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சில நிபந்தனைகள் விதித்ததாகவும் அதனை ஏற்காத தவெக ஆத்திரத்தில், அதிமுகவை உடைத்து சின்னாபின்னமாக்கி வருவதாகவும் சமூக வலைத் தளங்களிலும் பொது வெளியிலும் பேசப்பட்டு வருகிறது.

அப்பாவு
அப்பாவு

இந்த உண்மைகளை ஒட்டுமொத்தமாக மறைத்து விட்டு தமிழக முதல்வர் அவர்கள் அதிமுக எம்எல்ஏக்கள், கல்லாப் பெட்டி எம்.எல்.ஏக்கள், அமமுக எம்.எல்.ஏ, தற்போது ஆதரவு கொடுத்துவரும் கட்சி எம்.எல்.ஏக்கள், வைகோ அவர்களுடைய பத்திரிகை வாக்குமூலம் மற்றும் தொடர்ந்து அதிமுகழக எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்ய சொல்லி கட்சியில் சேர்த்து கொண்டிருப்பது வரை த‌.வெ.க குதிரை பேரங்களை தொடர்ந்து செய்து வருகிறது. இத்தொடர் குற்றங்களை விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, கரூரில் 41-பேர் இறந்ததற்கு CBI விசாரணை கேட்டதுபோல், இதற்கும் CM-sir CBI விசாரணை கேட்பீர்களா ? அல்லது தமிழக காவல்துறையை ஏவி எதிர்கட்சிகளை மிரட்டுவீர்களா?” எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

த.வெ.க. MLA-க்கள் பேர விவகாரம்: செந்தில் பாலாஜி, அசோக் குமார் ஆஜராகவில்லை! – FIRல் அதிர்ச்சி தகவல்?

த.வெ.க. எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசி அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாகக் கூறப்படும் வழக்கில்...

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்! – விரைவில் டெண்டர்

தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு...

"திமுக, அதிமுக இணைவதில் எங்களுக்கு பிரச்னை இல்லை" – மு.வீரபாண்டியன் சொல்லும் காரணம் என்ன?

நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் இந்திய...