27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

அதிமுக-வில் புதிய பதவி கிடைத்தும் எஸ்.பி.வேலுமணி அப்செட் – காரணம் என்ன?

Date:

சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. இதன்படி கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணியை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். கட்சி அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமிக்கு கோவை புறநகர் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனிடையே எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைந்த நிலையிலும், அவருக்கு பழைய பதவி வழங்கப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தவர்களுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய பதவிகளை வழங்கினார். இதன்படி எஸ்.பி. வேலுமணிக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் என்ற மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டது. அதேசமயம் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் என்ற பழைய பதவி வழங்கப்படவில்லை. அ.தி.மு.க-வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் என்பது, கோவை புறநகர் மத்திய மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

செ.ம.வேலுசாமி

தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கோவை புறநகர் மத்திய மாவட்டச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு செ.ம.வேலுசாமி நியமிக்கப்பட்டார். எஸ்.பி. வேலுமணி அ.தி.மு.க-வில் கோலோச்சிய வரை செ.ம.வேலுசாமிக்கு முக்கிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தொண்டாமுத்தூரை உள்ளடக்கிய மத்திய மாவட்டச் செயலாளர் பதவி செ.ம.வேலுசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எஸ்.பி.வேலுமணிக்கு மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டாலும், அது அதிகாரமில்லாத பதவி எனவும், இதனால் அவருக்கான அதிகாரங்கள் குறைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. எஸ்.பி. வேலுமணியின் பழைய பதவியான புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியை இரண்டாக பிரித்து, அவருக்கு எதிராக அரசியல் செய்து வரும் செ.ம.வேலுசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு வழங்கப்பட்டு இருப்பதும், அதிலும் அவரது சொந்த தொகுதியான தொண்டாமுத்தூர் பொறுப்பாளராக செ.ம.வேலுசாமி நியமிக்கப்பட்டு இருப்பதும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பள்ளி மாணவர்களின் ID கார்டில் சாதி பெயர்? – செங்கோட்டையன் பேசியது என்ன?

நேற்று (ஜூன் 26, 2026) கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு வருவாய்த்...

உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் அதிர்ச்சி: 14 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே கட்சியில் சேர திட்டம்?

2022ம் ஆண்டில் இருந்து சிவசேனாவிற்கு தொடர்ந்து நெருக்கடி வந்து கொண்டே இருக்கிறது....

'தமிழகத்துக்கு சம்பந்தமே இல்லாதவரை எப்படி.?' – டெல்லி பிரதிநிதி நியமனத்துக்கு நயினார் எதிர்ப்பு

தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகக் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா...