24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

`வரும் திங்கட்கிழமை' – தவெக-வில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்?

Date:

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவுமான சி. விஜயபாஸ்கர் வரும் திங்கட்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜயபாஸ்கர்

இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை இன்று மாலை நேரில் சந்தித்த விஜயபாஸ்கர், தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இணைவது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜயை வரும் திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நேரில் சந்திக்கும் விஜயபாஸ்கர், அப்போது கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை ஈசிஆரில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் விஜயபாஸ்கருடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய்

முன்னதாக, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர், அதிமுக தலைமையின் செயல்பாடுகள் குறித்து சமூக வலைதளங்கள் வாயிலாக மறைமுக அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார். இதன் தொடர்ச்சியாகவே அவர் புதிய அரசியல் முடிவை எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“த்ரிஷா படத்தை வச்சே ஆகணும்'னு நான் ஏன் சொன்னேன்னா.?' – காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலரின் பதில்

காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் என்றாலே விவாதங்களுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது....

`தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்…' – மு.வீரபாண்டியன்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில்...

`நெல் கொள்முதல் செய்யாததால் ஒரு நாள் மழையில், பல மாத உழைப்பு வீணாகிறது' – நீதிபதிகள் வேதனை

தஞ்சையைச் சேர்ந்த அமிர்தராஜ் ஹமீதுதீன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு...

பாமக: `தொண்டர்களுக்கு மனக்கசப்பு இருக்கும்தான்!’ – ராமதாஸ், அன்புமணி சந்திப்பு குறித்து ஜி.கே.மணி

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான...