20
June, 2026

A News 365Times Venture

20
Saturday
June, 2026

A News 365Times Venture

மேகதாது: `திமுகவை போல தவெக வெற்று நாடகங்களை நடத்தக்கூடாது’ – வானதி சீனிவாசன்

Date:

பா.ஜ.க. தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், “மேகதாது அணை திட்​டம் என் இதயத்​துக்கு நெருக்​க​மானது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜ​ய்யுடன் பேச்சு நடத்த தயா​ராக இருக்​கிறேன் என கர்நாடகா முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது,  மேகதாது  திட்​ட​மானது, சம நிலை அணைத் திட்​ட​ம். அங்கு நீரைத் தேக்​கி​னால் வறட்சிக் காலத்​தில் தமிழ்நாட்டிற்கு நீரை எளி​தாக திறந்​து​ விடலாம் என்று தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்துள்ளார்.

காவிரி நதி பாயும்  தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் அனுமதி இல்லாமல் கர்நாடகம் அணை கட்டக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.  இதை மதிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்ற முதலமைச்சர் சிவக்குமாரின் கடமையாகும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார். மேகதாதுவில் கர்நாடக காங்கிரஸ் அரசு அணை கட்டினால், இப்போது தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கும் உபரி நீரும் வராது. தமிழ்நாடு  பாலைவனமாக மாறிவிடும்.

வானதி சீனிவாசன்

எனவே, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள த.வெ.க. அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் த.வெ.க. கூட்டணி அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் நம் கூட்டணி கட்சி தானே ஆட்சி செய்கிறது, அவர்களை எப்படியாவது ஏமாற்றி மேகதாதுவில் அணை கட்டி விடலாம் என்று சிவகுமார் நினைக்கிறார். ஆனால் காங்கிரசை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு, அமைச்சர் பதவியும் கொடுத்து, கொஞ்சி குலாவிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது அணை பிரச்சினையில் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார். இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும்.

எனவே, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் சந்தித்து மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்று டி.கே. சிவகுமாருக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்த வேண்டும்.  பெரும்பான்மை இல்லாத போதும், ஆட்சி அமைப்பதிலும்,  ஆட்சியை தக்க வைக்க இப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும்  வேகத்தையும், திறமையையும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய் பயன்படுத்த வேண்டும்.

விஜய்
விஜய்

வெறுமனே மத்திய அரசுக்கு கடிதம், கர்நாடக முதலமைச்சருக்கு கோரிக்கை, சட்டமன்றத்தில் தீர்மானம் என்று கடந்த கால தி.மு.க அரசைப் போல வெற்று நாடகங்களை நடத்திக் கொண்டிருக்காமல், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேகதாது அணை பிரச்சினையில் த.வெ.க. அரசின் செயல்பாடு தமிழகத்தின் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கர்நாடக காங்கிரஸ் அரசிடம் மென்மையான அணுகுமுறையை ஒருபோதும் கையாளக் கூடாது. அப்படி செய்தால் வரலாறு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை ஒருபோதும் மன்னிக்காது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

டெலிகிராம்: `கட்டுப்பாடற்ற அரக்கனைப் போல.!' – மத்திய அரசின் கடும் வாதம்; தடையை உறுதி செய்த கோர்ட்

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் பெரும் சர்ச்சையை...

நிறுத்தப்பட்ட சட்டமன்ற ஒளிபரப்பு: "முழு நேரலை..முழு நேரலை…அத்தனையும் உருட்டா சார்! – அதிமுக கேள்வி

தமிழக சட்டமன்றத்தின் 2-வது கூட்டத்தொடர் இன்று (ஜூன்.19) நடைபெற்றது. மேகதாது விவகாரத்தில்...

வூஹான் ஆய்வகத்துக்கு அமெரிக்க நிதி; பொய் சொல்லிய ஃபௌசி? – ஆதாரங்களுடன் அதிரவைத்த துளசி கபார்ட்!

உலகையே உலுக்கிய கோவிட்-19 பெருந்தொற்றின் பிறப்பிடம் எது? இந்தக் கேள்விக்கான விடை...

‘தொழிலை மீட்க உதவி செய்யுங்கள்’ – அமைச்சர் கீர்த்தனாவுக்கு ஜப்பான் நபரின் வேண்டுகோள்!

ஜப்பானை சேர்ந்த ஃபுட்டோஸி இட்டோ என்பவர் மதுரையை சேர்ந்த சரவணனுடன் இணைந்து...