13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

CJP: பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த இளைஞர்கள் – அவர்கள் சொல்லும் நோக்கம் என்ன?

Date:

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலகக் கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்களும் மாணவர்களும் திரண்டு பிரம்மாண்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.

cjp protest in delhi

இந்தப் போராட்டத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த பீகாரைச் சேர்ந்த ரவி என்ற இளைஞர், “கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும், என் தங்கையும் நீட் தேர்வுக்காக கடுமையாக படித்து வருகிறோம். தங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பங்களுக்கு இந்தத் தேர்வுகள் வெறும் தேர்வுகள் மட்டுமல்ல, வாழ்க்கையை மாற்றும் மிகப்பெரிய வாய்ப்புகள். நாங்கள் வன்முறை செய்ய வரவில்லை. எங்களின் நியாயமான குரல் அதிகாரிகளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே வந்துள்ளோம்” என்றார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாஹில், “கல்வி முறையைக் காப்பாற்றவும் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தவும் தன் சொந்தப் பணத்தில் 50 மாணவர்களுடன் விமானம் மூலம் டெல்லி வந்து போராட்டத்தில் இணைந்துள்ளோம்.” என்கிறார்.

cjp protest in delhi
cjp protest in delhi

உத்திரப்பிரதேசம் ஹாபூரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பேசுகையில், “எங்களுக்குப் பின்னால் எந்த அரசியல் கட்சியும் இல்லை. 2024 மற்றும் 2026 ஆகிய இரு ஆண்டுகளிலும் நீட் வினாத்தாள் கசிந்ததால் எங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

‘காக்ரோச் ஜனதா கட்சி’ சமூக வலைத்தளங்களில் உருவாக்கப்பட இந்தபக்கம், நீட் மற்றும் சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு விவகாரங்களால் தற்போது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக – அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக...

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...