13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

மதுரை : மனைவியை சேர்த்து வைக்ககோரி மதுபோதையில் 'ஸ்பைடர் மேன்' போல் கட்டடத்தில் ஏறிய நபர்!

Date:

மதுரை மாநகர் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டிகடல்.  இவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

பாண்டிகடலின் மனைவி தாயாரின் வீட்டிற்கு சென்ற நிலையில் தன்னுடன் வர வேண்டும் பாண்டிகடல் அழைத்துள்ளர். அவரது மனைவி இதனை மறுத்துள்ளார்.

இந்நிலையில் மதுபோதையில் இருந்த கடல்பாண்டி இரவு 10 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலைய காம்ப்ளக்ஸ் கட்டிடத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு குழாயை பிடித்தவாறு சர்ரென ‘ஸ்பைடர் மேன்’ போல விறுவிறுவென ஏறியுள்ளார்.

தனது மனைவி மகனை தன்னோடு சேர்த்துவைக்க வேண்டும்; மனைவி இங்கு வர வேண்டும் என கூறியபடி அடுத்தடுத்த தளங்களுக்கு குழாயில் தொங்கியபடி ஏறினார்.

இதனை பார்த்த பொதுமக்கள் திடீர்நகர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் காவல்துறையினர் பெரியார் பேருந்து நிலைய  தீயணைப்புத்துறையினரை வரவழைத்தனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கீழே இறங்குமாறு கெஞ்சியும், பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறங்க மறுத்து, `தனது மனைவி அவனியாபுரத்தில் உள்ளார்.

அவரை அழைத்துவர வேண்டும். இல்லையென்றால் குதித்துவிடுவேன்’ என தொடர்ந்து கூறியபடியே தொங்கியதோடு ஜன்னலில் உள்ள கண்ணாடிகளை உடைத்து அதை வைத்து உடலை கிழித்துகொண்டு காயப்படுத்தியபடி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மனைவி எங்கு உள்ளார் என காவல்துறையினர் கேட்ட போது அவனியாபுரத்துல ‘பாண்டிகடல்னு பொண்டாட்டினு சொன்னா தெரியும் இங்கு கூப்டு வாங்க’ என கூறி காவல்துறையினர், தீயணைப்புத்துறையினரின் பொறுமையை சோதித்து பார்த்தார்.

மேலும் கீழே குதித்துவிடுவார் என்பதற்காக தீயணைப்புதுறையினரும் வலையை விரித்தபடி காத்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மதுபோதையில் இருந்த பாண்டிகடலை நீண்ட நேர போராட்டத்திற்கு மேல ஏறிய தீயணைப்புத்துறையினர் நொடிப்பொழுதில் ஜன்னல் வழியாக இழுத்து காப்பாற்றி மீட்டனர்.

இதனை தொடர்ந்து உடல் முழுவதும் காயங்களுடன் இருந்த பாண்டிகடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

மதுபோதையில் இருந்த பாண்டிகடல் செய்த ஸ்பைடர்மேன் சாகசத்தால் பல மணி நேரமாக தீயணைப்புத்துறையினரும், காவல்துறையினரும் போராடி தவித்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" – கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம்...

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் – எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை...

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' – கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of...