13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

"ஒரு தொகுதியில தனிச்சின்னத்தில போட்டியிடலாம்'னு சொன்னாங்க, அப்புறம்.!" – வைகோ ஆதங்கம்

Date:

முதல்வர் விஜய்யை மதிமுக எம்.பி துரை வைகோ நேற்று திருச்சி விமான நிலையத்தில் வரவேற்றிருந்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “நாங்கள் இனி தனி இயக்கம்.

நாங்கள் துரதிஷ்டவசமாக தி.மு.க கூட்டணியில் உதயசூரியனில் போட்டியிட்டுவிட்டோம்.

உதய சூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் த.வெ.க-விற்கு ஆதரவு தரமுடியவில்லை.

துரை வைகோ

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இடதுசாரி போன்ற கட்சிகள் ஆதரவு அளித்திருக்கின்றன. அதில் எவ்விதத் தவறும் இல்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடலாம் என்றார்கள். பிறகு உதயசூரியனில் போட்டியிடுங்கள் என்றார்கள்.

நான் பரப்புரை செய்த 34 தொகுதிகளில் 24- ல் திமுக வென்றது. நாங்கள் உடல், பொருள், ஆவியை கொடுத்து பணியாற்றி இருக்கிறோம். ஓரிரு கட்சிகள் தவிர எல்லாக் கட்சிகளுக்கும் எங்களை விட அதிக இடங்களை தந்தார்கள்.

திமுகவின் ஆதரவோடு வென்ற காங்கிரஸ் நன்றி கூட தெரிவிக்காமல் கூட சென்றது. ஆனால் இன்று அந்தக் கட்சி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறது.

வைகோ
வைகோ

அதேபோல தேமுதிக 10 இடம் 1 ராஜ்யசபா பெற்று 1 இடத்தில் தான் வென்றது. ஆனால் அவர்கள் தனிச்சின்னத்தில் தான் போட்டியிட்டார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களது சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற்றது. அதனால் நாமும் தனிச்சின்னத்தில் நின்றிருக்கலாமோ என்ற ஆதங்கத்தில் துரை வைகோ பேசிவிட்டார்.

நான் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அவசரப்பட்டு முடிவு எடுக்க மட்டோம். வரும் 27 ஆம் தேதி பொதுக்குழுவில் முடிவு எடுப்போம். ” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" – நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல்...

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' – கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of...

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' – அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த...

இந்தியாவின் உயரிய விருதை பெற்ற தமிழக ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு! எதற்கு தெரியுமா?

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் மீனாட்சி...