28
May, 2026

A News 365Times Venture

28
Thursday
May, 2026

A News 365Times Venture

"எங்களுக்குள் கருத்து வேறுபாடுதான், பிளவு கிடையாது" – இ.பி.எஸ் உடனான சமாதானம் பற்றி எஸ்.பி. வேலுமணி

Date:

நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றிருந்தது. அதிமுக 47 இடங்களை வென்றிருந்தது.

இதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாகவும், மற்றவர்கள் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான இன்னொரு அணியாகவும் பிரிந்தனர். இதில் எஸ்.பி. வேலுமணி தரப்பு தவெக-விற்கும் ஆதரவளித்திருந்தது.

எடப்பாடி – எஸ்.பி வேலுமணி – சிவி சண்முகம்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிமுக-வின் இந்த இரு பிரிவிற்கும் இடையில் மோதல் நடந்து வந்தது.

எஸ்.பி.வேலுமணி தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் தவெக-வில் இணைந்தனர். இன்று, எஸ்.பி. வேலுமணி தரப்பு இறங்கி வந்து எடப்பாடி பழனிசாமியை அவருடைய வீட்டில் சென்று சந்தித்து சமாதானம் ஆகினர்.

சமாதானம் ஆனது பற்றி பேட்டியளித்திருக்கும் வேலுமணி, “தகுதி நீக்கம் மனுவை இருவரும் கொடுத்திருந்தோம். அதனை வாபஸ் பெற்றிருக்கிறோம். எங்களுக்குள்ள கருத்து வேறுபாடுதான்.

அன்று முதல் எங்களுடைய பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார்தான் என சொல்லியிருந்தோம். அவரிடம் சில கோரிக்கைகளை வைத்திருந்தோம். ஒரு கட்சி என்றால் வெற்றி, தோல்வி சகஜம்தான்.

தோல்விக்கு பின்னிருக்கும் காரணங்களை ஆராய அவரிடம் கோரிக்கை வைத்திருந்தோம். அதற்கென குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். அதனை அவரும் ஒவ்வொன்றாக செய்வதாக சொல்லியிருக்கிறார். எங்களுக்குள் வெறும் கருத்து வேறுபாடுதான்.

எடப்பாடி பழனிசாமி, வேலுமணி

பிளவு கிடையாது. அதிமுக வலுவோடு செயல்படும். ஒற்றுமையாக நாங்கள் கட்சியை நடத்த வேண்டும் எனக் கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.

அதிமுக பொன்விழா கண்ட கட்சி. இந்தக் கட்சி எங்களுடைய உயிர். பதவிக்காக ஆசைப்பட்டுதான் நாங்கள் இப்படி செய்தோம் என தவறான தகவல்கள் பரப்பட்டது.

தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருந்தது. அதிமுக அடுத்து வெற்றிகளை சந்திக்க வேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. அதிமுக ஒன்றுகூடி விட்டது. கருத்துவேறுபாடு சரி செய்யப்பட்டது. சிவி சண்முகம் எங்களோடு இருக்கிறார்.” எனப் பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சொதப்பும் அரசு செயலிகள்… சரிசெய்யுமா விஜய்யின் புதிய அரசு?

புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது. இளம் அமைச்சரவை அமைந்துள்ளது. இளைஞர்கள் பெருமளவு ஆதரவளித்து...

`ஆளுநரே பல்கலைகக்கழகங்களின் வேந்தரா? 'பாஜக-வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சி' – பொன்முடி சாடல்

தமிழ்நாட்டின் தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று, "முதலமைச்சரே...

"மற்ற கட்சிகளுக்கு எதிராக ED ஊடுருவல் வேண்டும்; இதுவே காங்கிரஸ் நிலைப்பாடு" – பினராயி விஜயன்

கேரளா எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை சோதனை...