15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

“காளியம்மாள் கட்சியிலிருந்து வெளியேற முழு சுதந்திரம் இருக்கிறது" – சீமான் ஓப்பன் டாக்

Date:

தமிழ்நாட்டில் இன்று நாம் தமிழர் கட்சி என்று சொன்னால் சீமானுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் முகங்களில், கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முக்கியமானவர். இவ்வாறிருக்க, கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியிலிருந்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தொடர்ச்சியாக பலரும் வெளியேறி வருகின்றனர்.

காளியம்மாள்

இதில், காளியம்மாளும் கட்சியில் இருந்து விலகப்போவதாகத் தொடர்ச்சியாகத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. அப்போதெல்லாம், அப்படி எதுவுமில்லை என காளியம்மாள் விளக்கமும் அளித்திருக்கிறார். இத்தகைய சூழலில், தற்போது நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகப்போவதாக மீண்டும் பேச்சுக்கள் பரவி வருகிறது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று காளியம்மாள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீமான், “இந்தக் கட்சியில் இயங்குவதற்கும், வெளியேறுவதற்கும் முழுச் சுதந்திரம் இருக்கிறது. இதுவொரு ஜனநாயக அமைப்பு. முதலில் சமூக செயற்பாட்டாளராகத்தான் தங்கை இருந்தார். அவரை அழைத்து வந்தது நான்தான்.

சீமான்

யார் வேண்டுமானாலும் வேறு அமைப்பில் இணைந்து செயல்படத் தோன்றினால் போகலாம். வரும்போது வணக்கம் சொல்வோம். சென்றால் நன்றி செல்வோம். பருவ காலங்களில் இலையுதிர் காலம் என்று ஒன்று இருக்கும். அதுமாதிரி, எங்கள் கட்சிக்கு இது களையுதிர் காலம். திடீரென்று வருவார்கள், போவார்கள். கட்சியில் இருக்கலாமா அல்லது வெளியேறி வேறு இயக்கத்தில் சேர்ந்து இயங்கலாமா என்று முடிவெடுக்கும் முழு சுதந்திரம் தங்கைக்கு இருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காங்கிரஸ் மூத்த தலைவர், சௌமியா அன்புமணியின் தந்தை! – ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி யார்?

தமிழின வளர்ச்சி, தமிழ்நாடு மேம்பாடு, பொதுவாழ்வு சாதனை ஆகியவற்றில் அடிப்படையில் ஒவ்வொரு...

"1970-க்குப் பிறகு பிறந்த ஒரு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்!" – மாணிக்கம் தாகூர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடியேற்றுவதை 'புதிய...

"நிர்வாக ரீதியாக மட்டுமே மத்திய அரசோடு ஒத்துழைக்கிறோம்; ஆனால்.!" – விஜய்| 80வது சுதந்திர தினம் | Live Updates

விஜய் உரை"மக்களே... ஓட்டு போட்டுவிட்டோம். கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கி போய்விடாதீர்கள்....

‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ – ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' – ஈரான் பதிலடி

தெரிந்தோ, தெரியாமலோ ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தி அந்தப்...