13
May, 2026

A News 365Times Venture

13
Wednesday
May, 2026

A News 365Times Venture

உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு – இரண்டே வாகனங்களுடன் பிரதமர் மோடி!

Date:

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமர் மோடி

மே 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர், “கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தே வேலை செய்வது (Work From Home) ஆன்லைன் கூட்டங்கள் போன்ற நடைமுறைகளுக்கு நாம் பழகியிருந்தோம். தேச நலன் கருதி இன்று நாம் மீண்டும் அந்த நடைமுறைகளைத் தொடருவது காலத்தின் கட்டாயமாகும்.

பொதுமக்கள் திருமணத்திற்காக ஓராண்டுக்கு, தங்கம் வாங்க வேண்டாம் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்
பிரதமரின் பாதுகாப்பு வாகனங்கள்

இந்நிலையில் பெட்ரோல், டீசல் நெருக்கடி எதிரொலியால் பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களைக் குறைக்க உத்தரவிட்டிருக்கிறார். மேலும் தமது பாதுகாப்பு வாகனங்களில் மின்சார கார்களை கூடுதலாகப் பயன்படுத்தவும் யோசனை வழங்கியிருக்கிறார்.

இந்த மாற்றத்திற்காகப் புதிய வாகனங்களை வாங்கக் கூடாது என்றும், இருப்பில் உள்ள வாகனங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

தவிர வெறும் இரண்டு கார்களுடன் தான் இன்று பிரதமர் மோடி பயணம் செய்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘தவெக-அதிமுக கூட்டணி சேர்வதை மக்கள் விரும்ப மாட்டார்கள்’ – போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

'விஜய் ஸ்கெட்சை கணிக்க தவறிய எடப்பாடி பழனிசாமி.!' – அதிமுக மீண்டும் ஒருமுறை பிளவுப்பட்ட பின்னணி!

இரு கூறாக பிளவுப்பட்டு களத்தில் நிற்பது ஒன்றும் அதிமுகவுக்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர்,...

`துரோகம் செய்த சி.வி.சண்முகத்தை கட்சியை விட்டு தூக்குங்க!' – விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல்

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பேட்டை முருகன் தலைமையில்,...

`சின்னம்மா, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும்' – எஸ்.பி.வேலுமணி உறுதி!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தவெக...