11
May, 2026

A News 365Times Venture

11
Monday
May, 2026

A News 365Times Venture

கேரளம்: `இரண்டரை ஆண்டுக்கு ஒரு முதல்வர்?' – 140ல் 102 வென்றும் காங்கிரஸ் முடிவு வெளியாவதில் தாமதம்!

Date:

கேரள மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 102 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் வெற்றிபெற்ற பிறகும் முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் திணறுகிறது டெல்லி தலைமை.

தேர்தலில் தீவிரமாக செயல்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் முதல்வர் சீட்டுக்காக காய் நகர்த்துகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை வழிகாட்டுதலின்படி முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கன் ஆகியோர் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகமான இந்திரா பவனில் புதிய எம்.எல்.ஏ-க்களை சந்தித்து கருத்து கேட்டனர்.

அதில் மாநில தலைவர் சன்னி ஜோசப் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் கே.சி.வேணுகோபாலுக்கு ஆதரவாக கருத்து கூறியதாக ஒரு பட்டியல் வெளியாகி அதிர்வலையை கிளப்பியது. பின்னர் கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோரை டெல்லிக்கு அழைத்து அகில இந்திய தலைமை பேசியது.

மேலும், இந்த மூவருக்கும் ஆதரவாக கேரளாவில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்றும்படி டெல்லி தலைமை கேட்டுக்கொண்டது. இந்த நிலையில் இன்று அல்லது நாளை கேரள முதல்வர் யார் என டெல்லி தலைமை அறிவித்துவிடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ராகுல் காந்தி – மல்லிகர்ஜுன கார்கே

இதுகுறித்து காங்கிரஸ் விவரப்புள்ளிகள் கூறுகையில், “வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா ஆகியோருக்கிடையே முதலமைச்சர் பதவியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சமரசத் திட்டத்தை மல்லிகார்ஜுன் கார்கே முன்வைத்திருப்பதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனியாரிட்டி அடிப்படையில் முதல் இரண்டரை ஆண்டுகள் ரமேஷ் சென்னிதலாவுக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சதீசனுக்கும் வழங்க வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம் என்று கூறப்படுகிறது.

​அதே சமயம், பெரும்பான்மையான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கொண்ட தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை தவிர்ப்பது சரியாக இருக்காது என்ற நிலையில் ராகுல் காந்தி இருக்கிறாராம். கார்கேவின் பரிந்துரையை ராகுல் ஏற்றுக்கொள்வாரா என்பதையும், இம்மூவரும் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதையும் பொறுத்தே இறுதி முடிவு அமையும்.

ரமேஷ்​சென்னிதலா மற்றும் வி.டி.சதீசனைத் தவிர்த்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினரான வேணுகோபாலை முதல்வராக தேர்வு செய்வது கேரளாவில் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்ற அச்சமும் மத்திய தலைமைக்கு உள்ளது.

வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால்

தொண்டர்கள் கோஷ்டிகளாக பிரிந்து இயங்கினால் அது அரசின் செயல்பாட்டைப் பாதிக்கும். கே.சி.வேணுகோபால் முதலமைச்சராவதில் தனக்கு உடன்பாடில்லை என்பதை சதீசன் ராகுலிடம் தெளிவுபடுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ​

டெல்லியில் இருந்து திரும்பிய வி.டி.சதீசன் நேற்று பறவூரில் இருந்தார். வீட்டிற்கு வந்த தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். சனிக்கிழமை பேச்சுவார்த்தைக்குப் பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லியில் தங்கியிருந்த சென்னிதலா நேற்று மாலை கேரளத்துக்கு திரும்பினார்.

இதற்கிடையில், முதலமைச்சர் யார் என முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுவது மாநில காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னை சென்றிருந்த ராகுல் காந்தி நேற்று மாலை டெல்லி திரும்பினார்.

கர்நாடக அமைச்சரின் மறைவையொட்டி பெங்களூரு சென்றிருந்த கார்கே இன்று மாலை டெல்லி திரும்புவார். இருவர் முடிவெடுப்பதற்கு முன்பாக சோனியா காந்தி மற்றும் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் கருத்தையும் கேட்பார்கள். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகலாம்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒரு வாக்கில் தோல்வி; பெரியகருப்பனின் புகார் – `ஆதாரம் இல்லை' தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம்...

டி.கே. பிரபு: காங்கிரஸ் பாரம்பர்யம்; இளம் ‘டாக்டர்’ – காரைக்குடியில் இருந்து `முதல்' அமைச்சர்!

சிவகங்கை சீமையின் ‘செட்டிநாடு’ என அழைக்கப்படும் காரைக்குடி தொகுதியில் இப்போது கொண்டாட்ட...

`சிங்கப்பெண் அதிரடிப் படை' – முதல்வர் விஜய்யின் நேரடிக் கண்காணிப்பில்… முழு விவரம்!

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர்...

முதல்வர் விஜய்: முதல் சட்டமன்றக் கூட்டம்… எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி! |TN News Live Update

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று...