10
May, 2026

A News 365Times Venture

10
Sunday
May, 2026

A News 365Times Venture

புது காட்சிகள் புது முயற்சிகள்; மேடையிலேயே `அதிகார' மையங்களுக்கு எச்சரிக்கை- வாழ்த்துகள் ஜோசப் விஜய்

Date:

மே 4-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள், தமிழ்நாடு அரசியல் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மாறி மாறி திராவிடக் கட்சிகள் வென்று வந்த மண்ணில், முதல் தேர்தலிலேயே இமாலய சாதனை படைத்தது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

சந்தித்த முதல் தேர்தலிலேயே 108 இடங்கள் என்பது யாரும் எண்ணிப் பார்த்திடாத மேஜிக் ‘எண்.’ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, ஆண்ட கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தாலும், ஆட்சி அரியணை கைத்தொடும் தூரத்தில் இருந்தபோது எக்கச்சக்க தடைகள்!

தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளை முதல் ஆப்ஷனாக வைத்து காய்நகர்த்திய தவெக, மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர் நேற்றைய தினம் பெரும்பான்மையை உறுதிசெய்தது. தான் கொடுத்த டாஸ்க்கை கச்சிதமாக முடித்த விஜய்யை, இனியும் ஆட்சி அமைக்க அழைக்காமல் அலைக்கழிப்பது சரியல்ல என்றெண்ணிய பொறுப்பு ஆளுநர், முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து நேரு ஸ்டேடியத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, ‘சி.ஜோசப் விஜய்’ தலைமையிலான அமைச்சரவை பதவியேற்புக்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்தன. காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுவதாக இருந்தாலும், குறித்த நேரத்துக்கு முன்னதாகவே விழா அரங்குக்கு வந்து ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரையும் விஜய் வரவேற்றது பலரையும் ஈர்த்தது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்

10 மணி நெருங்கும் நேரத்தில் என்ட்ரி கொடுத்த பொறுப்பு ஆளுநர் அர்லேக்கரை முறையாக வரவேற்று மேடைக்கு ஏறினார் விஜய்.. முதல் நபராய், முதலமைச்சராய்… ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என விஜய் பதவியேற்க, அரங்கமே ஆர்ப்பரித்து மகிழ்ந்தது. விஜய்யைத் தொடர்ந்து அவரின் தளபதிகளான ஆனந்த், ஆதவ் தொடங்கி முதற்கட்டமாக 9 அமைச்சர்கள் முறையே பதவியேற்றனர். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பெண் அமைச்சராக கீர்த்தனா பதவியேற்றிருப்பது கூடுதல் சிறப்பு. ஆளுநர் அனைவருக்கும் பதவியேற்பு செய்து வைத்ததைத் தொடர்ந்து, வந்தே மாதரம், ஜன கண மன, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு பதவியேற்பு விழா நிறைவுபெற்றது.

விழா முடிந்துவிட்டது என நினைத்து அங்கிருந்து கிளம்ப இருந்தவர்களை, படு உற்சாகத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது அந்த அறிவிப்பு. ‘முதல்வர் விஜய், முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு உரையாற்றுவார்’… அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் நேரு ஸ்டேடியமே தலைமைச் செயலகமாக மாறிப்போனது. மேஜைகள் போடப்பட்டு, அங்கேயே கோப்புகளில் கையெழுத்திட தயாரானார் முதல்வர் விஜய். மேடையில் இருந்தவர்களுடன் சேர்ந்து முதல்வர் விஜய்யே மேஜை, நாற்காலிகளை எடுத்துப் போட்டது அனைவரையும் ‘அடடே’ சொல்ல வைத்தது. அதைத் தொடர்ந்து முதல்வராகத் தனது முதல் கோப்பாக, 200 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான திட்டத்தில் கையெழுத்திட்டார் சி.ஜோசப் விஜய். அதனைத் தொடர்ந்து ‘சிங்கப்பெண்’ திட்டம் மற்றும் ‘போதைப்பொருள் தடை அலகுகள்’ ஆகிய திட்டங்களில் கையெழுத்திட்டார்.

முதலமைச்சர் விஜய்

‘இது உங்கள் ஆட்சி’ என்பதை வெறும் வார்த்தையில் சொல்லி நிற்காமல், மக்களுக்கான திட்டங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறார்.

இலவச மின்சாரம் — சாமானிய குடும்பங்கள் கேட்டது!

500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு மாதம் 200 யூனிட்டுகள் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, தமிழ்நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான சாமானிய மக்களுக்கு நேரடியான பலனை அளிக்கும். விலைவாசி உயர்வால் தினமும் போராடும் குடும்பங்களுக்கு இது நிச்சயம் ஆறுதல் அளிக்கும்.

அமைச்சரவை பதவியேற்பு

சிங்கப்பெண் அதிரடி படை — பெண் பாதுகாப்பில் புரட்சி

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ‘சிங்கப்பெண் அதிரடி சிறப்புப் படை’ உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கை. வீதியில் நடந்து செல்ல பயப்படும் சூழல் மாறி, பெண்கள் நம்பிக்கையுடன் வாழும் தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான இந்த முயற்சி பாராட்டுக்குரியது. ‘உங்கள் அண்ணன் நான் இருக்கிறேன். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு’ என்பதை இந்தக் கையெழுத்தின் மூலம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் விஜய்.

போதைப்பொருள் தடை அலகுகள் — எதிர்கால தலைமுறையைக் காக்கும் கேடயம்!

அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் தடை சிறப்பு அலகுகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, இளைஞர்களை அழிக்கும் போதை என்னும் கொடுங்கோலனை வேரோடு பிடுங்கியெறியும் முயற்சி. இது ஆரோக்கியமான மற்றும் போதையில்லா தலைமுறைக்கான முதலீடு!

வெளிப்படையான ஆட்சி — வெள்ளை அறிக்கை:

முந்தைய அரசு விட்டுச் சென்ற ரூ.10 லட்சம் கோடிக்கும் மேலான கடன் சுமை குறித்து மக்கள் முன் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் விஜய். வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிதி நிலைமையைத் தெளிவாக விளக்குவேன் என்று கூறியிருப்பது பாராட்டுக்குரியது. “எந்தப் பொய் வாக்குறுதிகளையும் கொடுக்க மாட்டேன். என்னால் எது சாத்தியமோ அதைச் செய்வேன்,” என மக்களிடம் உறுதி அளித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு:

“மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொட மாட்டேன்” என்று பகிரங்கமாக அறிவித்திருப்பது நம்பிக்கையை விதைக்கிறது. விஜய் கட்சி தொடங்கியது முதலே, இதை தொடர்ந்து மக்கள் மனங்களில் பதிவுசெய்து வருகிறார். மேலும், பதவியேற்ற மேடையில் வைத்தே தனது கட்சியினரையும் எச்சரித்திருக்கிறார் என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆட்டம் போட நினைத்தால், அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள் என்றும் டிஸ்க்ளைமர் போட்டிருக்கிறார். ஊழலற்ற வெளிப்படைத்தன்மை வாய்ந்த அரசு அமைந்தால், மிகச் சிறப்பு!

திரைப்பட நட்சத்திரமாக இருந்தவர், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக மக்கள் நலனில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். சவால்கள் நிரம்பிய பாதையில் விஜய் எடுத்து வைத்துள்ள முதல் அடிகள் நம்பிக்கை தருகின்றன. ‘இது உங்கள் ஆட்சி’ என்ற விஜய்யின் வார்த்தைகள் வெறும் கோஷம் அல்ல, அது ஒரு உறுதிமொழி என்பதை அவர் நிரூபிக்க வாழ்த்துவோம்!

‘சி ஜோசப் விஜய் ஆகிய நான்… ‘ என்று பதவியேற்று, புதிய வாக்குறுதி அளித்து விஜய் பேசியது எல்லாம் சிலிர்ப்பூட்டம் திரைப்பட டயலாக் ஆக மட்டும் இல்லாமல், உண்மையில் செயல்பாட்டில் செய்வார் என்றே நம்புவோம்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`முதல் சந்திப்பில் சங்கடம்… பதவியேற்பிலேயே விஜய் சொன்னாரே கவனிச்சீங்களா?' – நெகிழும் சஞ்சீவ்

நடிகர் சஞ்சீவ் தமிழக முதலமைச்சர் விஜய்யுடனான தனது நட்பு குறித்து நம்மிடம்...

`சாதிவாரி சர்வே; மதுக்கடைகள் மூடல்…' – முதல்வர் விஜய்-ன் கவனத்துக்கு அன்புமணி முன்வைப்பவை!

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக...

“காங்கிரஸ் ஒரு ‘துரோகக் கட்சி’ கூட்டணிக் கட்சிகளை முதுகில் குத்துகிறது!" – பிரதமர் மோடி தாக்கு!

காங்கிரஸ் கட்சி தனது அரசியல் லாபத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் இழைப்பதையே...

'மேலும் மேலும் நல்லது செய்யணும்' – விஜய் பதவியேற்பு விழாவில் கலைஞரின் பேத்தி கயல்விழி

இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கிறார். இந்த...