23
April, 2026

A News 365Times Venture

23
Thursday
April, 2026

A News 365Times Venture

"முன்பு வாரம் ஒருவரை அடித்து தூக்கிலிட்டுவிட்டு தற்கொலை என்பார்கள்" – மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு

Date:

மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணா நகரில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காகப் பரப்புரை செய்து வருகிறார் பிரதமர் மோடி.

மேற்கு வங்கத்தில் இன்று நடந்து வரும் முதல் கட்ட தேர்தல் குறித்து மோடி பிரசாரத்தில் பேசியதாவது…

“கடந்த 50 ஆண்டுகளில் வன்முறை மிகக் குறைந்த அளவில் அரங்கேறிய முதல் தேர்தல் இதுவாகும்.

இதற்கு முன்பு, வாரம் ஒருவரைத் அடித்து தூக்கிலிட்டுவிட்டு, அதைத் தற்கொலை என்று சொல்வது வழக்கமாக இருந்தது.

பிரசாரத்தில் மோடி

பல விதங்களில், சட்டமின்மையும் ரவுடித்தனமுமே மேலோங்கி இருந்தது.

தேர்தல் ஆணையத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வங்க மண்ணில் ஜனநாயகத்தின் கண்ணியத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளனர்.

இங்குள்ள அரசு ஊழியர்களையும் நான் பாராட்டுகிறேன். இதுவரை எனக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, வாக்குப்பதிவு விகிதம் முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வருகிறது” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related