19
April, 2026

A News 365Times Venture

19
Sunday
April, 2026

A News 365Times Venture

ஜூ.வி மெகா சர்வே: `சௌமியா அன்புமணி வெல்வாரா?' – எல்லையோர மாவட்டங்களின் சிக்னல் என்ன?

Date:

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது. வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.

சட்டமன்றத் தேர்தல் 2026

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.

தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.

தருமபுரி

அதன் அடிப்படையில், தருமபுரி தொகுதியில் பா.ம.க-வில் சௌமியா அன்புமணி, தே.மு.தி.க-வில் டாக்டர் இளங்கோவன், நா.த.க-வில் சாந்தலட்சுமி, த.வெ.க-வில் சிவன் போட்டியிடுகிறார்கள். பா.ம.க-வின் சிட்டிங் தொகுதி என்பதுடன் கூட்டணி பலம், சமுதாய பலம் சௌமியாவுக்கு ப்ளஸ்.

தருமபுரி
தருமபுரி

மக்களவைத் தேர்தலில் இரு முறை தோல்வியடைந்த அனுதாபமும் உள்ளூர்வாசி என்ற பரப்புரையும் டாக்டர் இளங்கோவனுக்கு கைகொடுத்தாலும் தி.மு.க நிர்வாகிகளின் கோஷ்டிப்பூசலும், தே.மு.தி.க-வுடன் வி.சி.க-வினர் முரண்பட்டு நிற்பதும் மைனஸாக உள்ளது. டாக்டர் ராமதாஸ் அணி, வேல்முருகன் அணி வேட்பாளர்களால் லேசான சேதாரம் ஏற்பட்டாலும் மாம்பழமே பழுக்கிறது.

திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி – தருமபுரி – திருவண்ணாமலை – விழுப்புரம் மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் இவர்களுடன் வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி முனுசாமி, திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு, கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் கு.பிச்சாண்டி, கலசப்பாக்கம் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி கே.எஸ். மஸ்தான், மயிலம் சி.வி.சண்முகம், திண்டிவனம் வன்னி அரசு என அரசியலின் முக்கியப் பிரமுகர்கள் களத்தில் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.

இந்த 4 மாவட்டங்களின் கள நிலவரத்தை துல்லியமாக அறிய க்ளிக் செய்யுங்கள்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

BJP: இன்று ஈரோடு வரும் அமித்ஷா, பயணத் திட்டம் என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள்...

ஜூ.வி மெகா சர்வே: `துரைமுருகனின் 50 ஆண்டு அரசியல்' – என்ன சொல்கிறது வட மாவட்டங்களின் களநிலவரம்?

தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய...