13
April, 2026

A News 365Times Venture

13
Monday
April, 2026

A News 365Times Venture

பாஜக பூத் கமிட்டி: "தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி பெருமைப்படுகிறேன்" – மோடி பாராட்டு; காரணம் என்ன?

Date:

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரம் தீவிரமாகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாகச் செயல்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை காலை 11 மணிக்கு காணொளி மூலம் தமிழக பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில், “தி.மு.க-வின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பாஜக செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

பிரதமர் மோடி

13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து ஏப்ரல் 15-ம் தேதி கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடி, பா.ஜ.க வேட்பாளருக்காகப் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related