10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

Date:

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.

கடந்த 30-ம் தேதி, இந்திய ரூபாயின் மதிப்பு இன்ட்ரா டேயில் ரூ.95-ஐ கூட தொட்டது. இது வரலாற்றின் புதிய வீழ்ச்சி.

இந்த நிலைமையெல்லாம் இப்போது கொஞ்சம் சரியாகி, ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92 – 93 என இருந்து வருகிறது.

ஏன் இந்த திடீர் மாற்றம் என்ற கேள்விக்கு, ‘இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு’ முக்கிய காரணம் என்பது பதில்.

இந்திய ரூபாய்

எப்படி இதை செய்தது?

ஏப்ரல் 10-ம் தேதிக்குள் (இன்று தான்) இந்திய வங்கிகள் வைத்திருக்கும் டாலரின் அளவு 100 மில்லியன் டாலராக மட்டுமே இருக்க வேண்டும் என்று லிமிட்டை செட் செய்தது இந்திய ரிசர்வ் வங்கி.

இதனால், வங்கிகள் பில்லியன் கணக்கான டாலரை சந்தையில் விற்றன. இதனால், டாலரின் சப்ளை அதிகரித்து, அது இந்திய ரூபாயிற்கு சாதகமாக இருந்தது.

அடுத்ததாக, இந்திய ரூபாயின் மதிப்பை நிலையாக வைக்க, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை இந்திய ரிசர்வ் வங்கி.

வேறு..?

போர் நிறுத்த அறிவிப்பு… அமைதிப் பேச்சுவார்த்தை போன்ற காரணங்களால், கச்சா எண்ணெயின் விலை சற்று குறைந்துள்ளது மற்றும் டாலருக்கான தேவையும் குறைந்துள்ளது.

இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனாலும், இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாகி உள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Hezbollah: 70 ஆண்டுகாலப் பகை; போர் நிறுத்த நாடகம்; லெபனானைத் தாக்கும் இஸ்ரேல்; பின்னணி என்ன?

``இரண்டு வாரங்களுக்கு ஈரான் போர் நிறுத்தப்படுகிறது'' என்ற செய்தியறிந்து உலக நாடுகள்...

“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” – ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!

``மகிளா காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியில்...

`கண்டா வரச் சொல்லுங்க ராகுலை கையோட கூட்டி வாருங்க.!' ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏற மறுக்கிறாரா ராகுல்?

கொளுத்திப் போட்ட விஜய்!''கண்டா வரச் சொல்லுங்க..ராகுலைக் கையோட கூட்டி வாருங்க..''திமுக உடன்...

'என்னுடைய பணம் இல்லை' முதல் ராஜினாமா வரை: யஷ்வந்த் வர்மா 'கட்டுக்கட்டான' பண வழக்கு|Timeline

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எழுந்தும், ஓராண்டு கழித்து இன்று...