10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

'என்னுடைய பணம் இல்லை' முதல் ராஜினாமா வரை: யஷ்வந்த் வர்மா 'கட்டுக்கட்டான' பண வழக்கு|Timeline

Date:

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்ட குற்றச்சாட்டு எழுந்தும், ஓராண்டு கழித்து இன்று தான் நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா செய்த செய்தி வெளியாகியுள்ளது.

இந்த வழக்கில் டைம்லைனை இங்கே காணலாம்.

மார்ச் 14, 2025: டெல்லியில் உள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தத் தீயை அணைத்த தீயணைப்பு துறையினர் யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டான பணங்கள் பாதி எரிந்தும்… பாதி எரியாமலும் இருந்ததைப் பார்த்திருக்கின்றனர்.

உச்ச நீதிமன்றம்

இதையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணம் கிட்டத்தட்ட ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால், ‘அந்தப் பணம் தன்னுடையது இல்லை’ என்று யஷ்வந்த் வர்மா மீண்டும் மீண்டும் தெரிவித்தார். தன் வீட்டில் பணம் இருந்த பகுதி அனைவரும் பயன்படுத்தும் ஒரு பகுதி என்று கூறினார்.

மார்ச் 20 – 21, 2025: இதனையடுத்து, உச்ச நீதிமன்ற கொலீஜியம் யஷ்வந்த் வர்மாவை மீண்டும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தது.

ஆனால், இந்த முடிவை அலகாபாத் நீதிமன்றம் கடுமையாக எதிர்த்தது.

மார்ச் 22, 2025: இந்தியாவின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவிலும் தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்றே யஷ்வந்த் வர்மா வாதாடினார்.

மார்ச் 23, 2025: யஷ்வந்த் வர்மா நீதிமன்றம் சம்பந்தமான பணிகளைப் பார்க்கத் தடை செய்யப்பட்டது.

ஏப்ரல் 5, 2025: அலகாபாத் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாகப் பதவியேற்றாலும், அவருக்கு எந்த நீதிமன்றப் பணியும் வழங்கப்படவில்லை.

ஓம் பிர்லா
ஓம் பிர்லா

மே 6, 2025: யஷ்வந்த் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்வதைத் தொடர்ந்து மறுத்து வந்தார். இதனால், இவரை பணி நீக்கம் செய்யக் கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குப் பரிந்துரைத்தார் சஞ்சீவ் கண்ணா.

ஜூலை 17, 2025: சஞ்சீவ் கண்ணாவின் இந்தப் பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் யஷ்வந்த் வர்மா.

ஆகஸ்ட் 12, 2025: இவரது பணி நீக்க மசோதா மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆகஸ்ட், 2025: மார்ச், 2026: இந்த வழக்கு குறித்து நாடாளுமன்றம் விசாரணை நடத்தியது.

ஏப்ரல் 9, 2026: நேற்று தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார் யஷ்வாந்த் வர்மா.

ஏப்ரல் 10, 2026: இன்று அவரது ராஜினாமா வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“காசு வாங்கி சீட்டை கொடுத்தார் கார்க்கே” – ஹசீனா சையத் பதவி பறிப்பின் பின்னணி!

``மகிளா காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ சீட் கொடுக்காமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியில்...

`கண்டா வரச் சொல்லுங்க ராகுலை கையோட கூட்டி வாருங்க.!' ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஏற மறுக்கிறாரா ராகுல்?

கொளுத்திப் போட்ட விஜய்!''கண்டா வரச் சொல்லுங்க..ராகுலைக் கையோட கூட்டி வாருங்க..''திமுக உடன்...

சரிவிலிருந்து இந்திய ரூபாய் மதிப்பு மீண்டது எப்படி? போர் நிறுத்தம் மட்டும் காரணமல்ல

சில மாதங்களாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டு இருந்தது.கடந்த 30-ம் தேதி,...

'இடஒதுக்கீடு குறித்த பேச்சு?' – எம்.ஜி.ஆர் சந்தித்த மிகப்பெரிய தோல்வி பற்றி தெரியுமா? | Vote Vibes

தமிழக அரசியலில் தோல்வியே காணாதவர் என்று போற்றப்படும் எம்.ஜி.ஆர் தனது அரசியல்...