14
April, 2026

A News 365Times Venture

14
Tuesday
April, 2026

A News 365Times Venture

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ – வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

Date:

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு, அடுத்தகட்ட பரப்புரைக்காக வேலூருக்கு வந்திருக்கிறார். இன்று மாலை 5 மணியளவில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கந்தனேரியில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

அதில், வேலூர் மாவட்டத்துக்குஉட்பட்ட 5 தொகுதிகளின் வேட்பாளர்களான காட்பாடி – தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், வேலூர் – ப.கார்த்திகேயன், அணைக்கட்டு – ஏ.பி.நந்தகுமார், கே.வி.குப்பம் – மருத்துவர் எம்.ராஜேஸ்வரி, குடியாத்தம் – கே.பி.பிரதாப் ஆகியோரை ஆதரித்து பேச உள்ளார் ஸ்டாலின். முன்னதாக, இன்று காலை கே.வி.குப்பம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின், வீடு வீடாகச் சென்றும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மு.க.ஸ்டாலின்

அப்போது, `கலைஞர் கனவு இல்லம்’ திட்டப் பயனாளி ஒருவரின் வீட்டுக்குள் சென்ற ஸ்டாலினிடம், `கலைஞர் மகளிர் உரிமை’ திட்டத்திலும் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதாகவும், தனது பிள்ளைகளும் காலை உணவு திட்டத்தில் பயனடைவதாகவும் வீட்டு உரிமையாளரான பெண் பயனாளி தெரிவித்து மகிழ்ந்தார். அவரிடம், `அடுத்து, இல்லத்தரசி 8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ என்று ஸ்டாலின் கேட்டார். அப்போது, வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் உடனிருந்தார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “தமிழ்நாடு முழுக்க குடும்பங்களில் இப்போது இந்த `டிஸ்கஷன்’ தான் ஓடுகிறது. வீட்டுக்குத் தேவையான எந்த பொருளையும் நீங்க வாங்கிக்கலாம். ஆனா, அது முழுக்க முழுக்க என் சகோதரிகளின் `சாய்ஸ்’ ஆகத்தான் இருக்கணும். அவர்கள்தான் இல்லத்து அரசிகள், குடும்பத்தலைவிகள்’’ எனப் பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கோவை: விஜய்யை வரவேற்கக் காத்திருந்த த.வெ.க. வேட்பாளர் மயக்கம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை...

'டார்கெட் 1 லட்சம் வாக்குகள்!' – பெரம்பூரில் வெல்வாரா விஜய்? |களநிலவரம் ஓர் அலசல்!

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில்...

VIP பணிகளுக்காக முடக்கப்பட்ட ஆம்புலன்ஸ்?: 'பறிபோன ஊடகவியலாளர் உயிர்' – பகீர் குற்றச்சாட்டு

மத்தியப் பிரதேசத்தில் 'ஸ்வர்ண் மங்கலம்' (Swarn Mangalam) என்ற மாத இதழின்...

பணி மாறுதலுக்கு பணம் வாங்கும் முறை ஒழிக்கப்படும்; திருப்பூரில் விஜய் அறிவித்த வாக்குறுதிகள் என்ன?

தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது மக்கள்...