10
February, 2026

A News 365Times Venture

10
Tuesday
February, 2026

A News 365Times Venture

$500 பில்லியன் இறக்குமதியை இந்தியா எட்டுவது சாத்தியமா? – பியூஷ் கோயல் விளக்கம் |அமெரிக்கா ஒப்பந்தம்

Date:

`அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளைச் செய்யும்’ இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய புள்ளிகளில் ஒன்று இது.

2023-24 நிதியாண்டில், இந்தியா அமெரிக்காவில் இருந்து 42.20 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்துள்ளது.

2024-25 நிதியாண்டில், அமெரிக்காவில் இருந்து இந்தியா 45.63 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்திருந்தது.

பியூஷ் கோயல்

இதுவரை, ஓராண்டிற்கு 50 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே அமெரிக்காவில் இருந்து இறக்குமதி நடந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில், அமெரிக்காவில் இருந்து எப்படி 500 பில்லியன் டாலர் மதிப்பிற்கு இறக்குமதி செய்ய முடியும்… அது எப்படி சாத்தியம் என்கிற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இதற்கு ஆங்கில செய்தி சேனல் ஒன்றில் பதிலளித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல்.

“அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிகளை அமெரிக்காவில் இருந்து கட்டாயம் செய்ய வேண்டியதில்லை. ‘செய்ய நினைக்கிறோம் (Intend to)’ என்பது தான் இந்தியா – அமெரிக்கா கூட்டறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

இதன் படி, அமெரிக்காவில் இருந்து எரிசக்தி பொருள்கள், விமானம் மற்றும் விமான பாகங்கள், முக்கிய உலோகங்கள், டெக்னாலஜி பொருள்கள், கோக்கிங் நிலக்கரி (Coking Coal) ஆகியவற்றை இறக்குமதி செய்வோம்.

கச்சா எண்ணெய், எல்.என்.ஜி, எல்.பி.ஜி, விமானங்கள், அதன் இன்ஜீன்கள், உதிரி பாகங்கள் போன்ற நமக்கு மிக முக்கியமான பல இறக்குமதிகளை, அமெரிக்காவால் நமக்கு விற்க முடியும்.

கோக்கிங் நிலக்கரி
கோக்கிங் நிலக்கரி

‘இதில்’ மட்டுமே…

இப்போது நம்மிடம் 140 மில்லியன் டன் எஃகு (Steel) திறன் நம்மிடம் உள்ளது. அதை 300 மில்லியன் டன்னாக உயர்த்த உள்ளோம். அதற்கு நமக்கு கோக்கிங் நிலக்கரி மிகத் தேவை.

இப்போதே நமக்குத் தேவைப்படுகிற கோக்கிங் நிலக்கரியின் மதிப்பு 17 பில்லியன் டாலர்கள். 300 மில்லியன் டன்னாக உயர்த்தும்போது, நமக்கு 30 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான கோக்கிங் நிலக்கரி தேவைப்படும்.

ஆக, கோக்கிங் நிலக்கரி ஒன்றிலேயே நம்மால் 30 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்ய முடியும்.

நாம் ஏற்கெனவே இரண்டு, மூன்று நாடுகளிடம் இருந்து கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்து வருகிறோம். இப்போது தேவை அதிகரிக்கும்போது, பேரம் பேசி நம்மால் குறைந்த விலைக்கே கோக்கிங் நிலக்கரியை வாங்க முடியும்.

விமானங்களும், உதிரி பாகங்களும்

அடுத்தது, இந்தியாவிற்கு விமானங்கள் தேவையாக இருக்கிறது. அதனால், இப்போது 50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு போயிங் விமானங்களை அமெரிக்காவிற்கு ஆர்டர் கொடுத்துள்ளோம்.

இத்துடன் இன்ஜீன், உதிரி பாகங்களையும் வாங்குவோம்.

80 – 100 பில்லியன் டாலர்களை வெறும் சிவில் விமானங்கள் மூலமே அடைந்துவிடுவோம் என்று நான் நினைக்கிறேன்.

நமக்கு எரிசக்திகளும் அதிகம் தேவை. அதற்கும் இறக்குமதிகள் தேவைப்படும்.

நாம் நிறைய டேட்டா சென்டர்கள், ஏ.ஐ மையங்கள் ஆகியவற்றை அமைக்கிறோம். இதற்காக இப்போதே நாம் பல நாடுகளிடம் இருந்து கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இறக்குமதி செய்கிறோம்.

போயிங் விமானம்
போயிங் விமானம்

அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த 300 பில்லியன் டாலர்கள் என்பது 2 டிரில்லியன் டாலராக மாறும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆக இவை அனைத்தையும் நம்மால் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்ய முடியும்.

முக்கியமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர் இறக்குமதி என்றால், ஒவ்வொரு ஆண்டும் 100 பில்லியன் டாலர் இறக்குமதி செய்ய வேண்டும் என்பதில்லை.

மொத்தமாகவே, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து 500 பில்லியன் டாலர் என்பது தான் பொருள்” என்று கூறியுள்ளார்.

இந்தப் பதில் கேட்கத் திருப்திகரமாக தான் உள்ளது. ஆனாலும், அந்தக் கூட்டறிக்கையில் இன்னொரு முக்கிய பாயிண்டும் இடம்பெற்றிருக்கிறது. அது, “இதில் இரு நாடுகளில் எந்த நாடு வரியை மாற்றினாலும், மற்ற நாடு அவர்களது கமிட்மென்டை அதற்கேற்றவாறு மாற்றலாம்” என்பதாகும்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பற்றி அனைவருக்குமே நன்கு தெரியும். அவர் ‘Make America Great Again’ என்கிற கோட்பாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

என்ன தான் கூட்டறிக்கையில், 500 பில்லியன் டாலர் மதிப்பில் இறக்குமதி செய்ய இந்தியா நினைக்கிறது (Intend) என்கிற வார்த்தை இடம்பெற்றிருந்தாலும், அவர் அதை கிட்டத்தட்ட இந்தியா எட்டிவிட நிச்சயம் எதிர்பார்ப்பார்.

இதை இந்தியா தவறும்பட்சத்தில், நிச்சயம் இந்தியா மீது மீண்டும் வரி ஆயுதம் பாயும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

2025-ம் ஆண்டு அமெரிக்காவிற்கும், தென் கொரியாவிற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், அந்த ஒப்பந்தத்தைத் தென் கொரியா செயல்பாட்டிற்குக் கொண்டு வரவில்லை. இதனால், தென் கொரியா மீதான வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் அச்சுறுத்தி உள்ளார் ட்ரம்ப்.

ஆக, நாம் அடுத்தடுத்து என்ன செய்கிறோம்… அமெரிக்காவிடம் இருந்து நாம் எப்படி இறக்குமதி செய்கிறோம் என்று ட்ரம்ப் அரசு நிச்சயம் உன்னிப்பாக கவனித்து வரும்.

இதை, இந்தியா நிச்சயம் கண்ணும் கருத்துமாக கையாள வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மின்சார வாரியம் முதல் ஆவின் வரை; நஷ்டத்தின் பின்னால் இருக்கும் அரசியல்; திமுக, அதிமுக சொல்வது என்ன?

மத்திய அரசின் 16-வது நிதிக்குழு, நாடு முழுவதும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள்...

`எங்களிடம் முதலிடத்தில் இருந்தார்; அங்கோ 4-வது இடம்' – செங்கோட்டையன் குறித்து திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வரும் 13ஆம் தேதி...

'அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டர்!' – அண்ணாமலைக்கு புதிய பதவி; அப்செட்டில் நயினார் நாகேந்திரன்

சமீபத்தில், 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 72 சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் பா.ஜ.க-வில் நியமிக்கப்பட்டனர்....

TVK: “100-க்கும் மேற்பட்ட ரெளடிகள் அராஜகத் தாக்குதல்" – தவெக தலைவர் விஜய் காட்டமான பதிவு!

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்...