31
March, 2026

A News 365Times Venture

31
Tuesday
March, 2026

A News 365Times Venture

'ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருக்கிறது; உங்களுக்கு இரண்டே வழிகள்தான்' – உலக நாடுகளைச் சாடும் ட்ரம்ப்

Date:

எப்போது ஈரான் போர் தொடங்கியதோ, அப்போதிருந்து ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுவிட்டது.

இதனால், எண்ணெய் உள்ளிட்ட வணிகங்களில் பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும் என்று ஈரானை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எவ்வளவோ பயமுறுத்திப் பார்த்தார். ஆனால், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

அதனால், ஹார்முஸ் ஜலசந்தி குறித்து ட்ரம்ப் தற்போது பதிவிட்டுள்ளார்.

“ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பதால், இங்கிலாந்து போன்று ஜெட் எரிபொருள் கிடைக்காமல் தவிக்கும் அனைத்து நாடுகளுக்கும்… ஈரானுக்கு எதிரான போரில் இணையாமல் இருக்கும் இந்த நாடுகளுக்கும் என்னுடைய பரிந்துரைகள்:

ட்ரம்ப் பதிவு

நம்பர் 1: எங்களிடம் நிறைய எண்ணெய் இருக்கிறது. அதனால், அமெரிக்காவில் இருந்து எண்ணெய் வாங்குங்கள்.

நம்பர் 2: கொஞ்சம் தைரியத்தைக் கூட்டி, ஹார்முஸ் ஜலசந்திக்குச் சென்று, எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்காக நீங்கள் எப்படி சண்டைப் போட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்.

எப்படி நீங்கள் எங்களுக்கு உதவவில்லையோ, அதே மாதிரி, இனி அமெரிக்காவும் உங்களுக்கு உதவாது.

ஈரானை நாங்கள் அடியோடு அழித்துவிட்டோம். கடினமான கட்டம் முடிந்துவிட்டது. உங்களுக்குத் தேவையான எண்ணெயை நீங்களே சென்று பெறுங்கள்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 : வேட்புமனு முதல் வேட்பாளர்கள் வரை.! key Details | Full schedule

தேர்தல் அறிவிப்பு :தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு...

"ஊழலின் பேரரசு திமுக ஆட்சி; மத்திய அரசு கொடுத்த ஒரு‌ பைசாக் கூட.!" – பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதையொட்டி இன்று கமலாலயத்தில் பாஜக...

`ஏன் நம்ம ஸ்கூல் மட்டும் இப்படியிருக்குன்னு' அரசு பள்ளியில் பயனில்லா கழிவறை; மனம் வெம்பும் மாணவர்கள்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஒன்றியம், கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி...

'தவெக கூட்டத்தில் திமுகவினர் பாட்டில் வீச்சு?' – மேடையிலேயே கொந்தளித்த ஆதவ்! – என்ன நடந்தது?

தவெக சார்பில் வில்லிவாக்கத்தில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா...