29
March, 2026

A News 365Times Venture

29
Sunday
March, 2026

A News 365Times Venture

'ஸ்ரீநகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தம்; அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆச்சு?’ – ஒமர் அப்துல்லா

Date:

‘ஒமர் அப்துல்லா பதிவு!’

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் எல்லாவற்றையும் முழுமையாக நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் அறிவித்த நிலையில், மீண்டும் தாக்குதல் நடப்பதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ட்வீட் செய்திருக்கிறார்.

ஒமர் அப்துல்லா

பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குனர் ஜெனரலின் அழைப்பையும் கோரிக்கையையும் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி என ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், சில நிமிடங்களுக்கு முன்பு ஜம்மு & காஷ்மீரில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முற்படுவதாகவும், அதேமாதிரி, ராஜஸ்தானிலும் சில பகுதிகளில் மக்களுக்கு தாக்குதலுக்கு முந்தைய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

ஒமர் அப்துல்லா
ஒமர் அப்துல்லா

இதனைத்தொடர்ந்து ஜம்மு & காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் இதைப் பற்றி ட்வீட் செய்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, ‘அமைதி ஒப்பந்தத்துக்கு என்ன ஆயிற்று? ஸ்ரீநகர் முழுவதும் குண்டு வெடிக்கும் சத்தங்கள் கேட்கிறது.’ எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திமுக தேர்தல் அறிக்கை: 'TV, Fridgeக்கு ரூ. 8000 மதிப்பிலான கூப்பன், 10 லட்சம் வீடுகள்'- முழு லிஸ்ட்

திமுக வருகிற சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நேற்று, போட்டியிடப்...

"சிறுபான்மையினர் வாக்குகளை அவ்வளவு எளிதாகக் கவர முடியாது" – விஜய்யை விமர்சிக்கும் கருணாஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்...

'சர்வே முடிவுகள்; கட்சிக் கட்டமைப்பு; MLA மீதான அதிருப்தி'- விஜய் பெரம்பூரை டிக் அடிக்க காரணம் என்ன?

விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடப் போவதாக அவரே அறிவித்திருக்கிறார். நாளையே வேட்புமனுவையும்...

தவெக: '23 பெண்கள்; 11 இஸ்லாமியர்கள்; 11 கிறிஸ்துவர்கள்' – விஜய்யின் வேட்பாளர் பட்டியலின் ஹைலைட்!

தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை விஜய் இன்று...