விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர் பகுதி முழுவதும் சினிமா படப் பாணியில் கோட்டை சூரங்குடி கிராமத்தைக் காணவில்லை என விளம்பரப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில், ‘தமிழக அரசே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! சிட்டிசன் சினிமா படப்பாணியில் 1933ம்ஆண்டு வைப்பாற்று வெள்ளத்தில் சாத்தூர் தாலுகா சூரன்குடி கிராமக் கணக்கிலிருந்த கோட்டை சூரங்குடி கிராமத்தைக் காணவில்லை.
இதுதொடர்பாக மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத சம்மந்தப்பட்ட சாத்தூர் ஆர்.டி.ஓ, தாசில்தார் மற்றும் சார்பதிவாளர் மீது நடவடிக்கை எடு இப்படிக்குக் கோட்டை சூரங்குடியில் வாழ்ந்த 18 சமுதாய வாரிசுதாரர்கள்’ என்ற பெயரில் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இது குறித்து ஊர்வாசிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “1933ம் ஆண்டுக்கு முன்பாகச் சாத்தூர் தாலுகா சூரன்குடி கிராமக் கணக்கில் கோட்டை சூரங்குடி எனும் கிராமம் இருந்தது.
கோட்டை சூரங்குடியில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் பலர் வசித்து வந்தனர். 1933 பிறகு அந்த கிராமத்தில் வாழ்ந்த அனைவரும் பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் கோட்டை சூரங்குடி கிராமத்தைக் காணவில்லை எனச் சங்கரநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளார்.

இந்த மனு மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, மனுமீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோட்டை சூரங்குடியில் வாழ்ந்த 18 சமுதாய வாரிசுகள் என்ற பெயரில் சினிமா படத்தில் வரும் வடிவேலு காமெடி பாணியில் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs