22
March, 2026

A News 365Times Venture

22
Sunday
March, 2026

A News 365Times Venture

விடாத ஊழியர்கள்.. மீண்டும் பறந்த மெயில்.. பணிந்தது கோவை ஐடி நிறுவனம்..!

Date:

கோவை ஆர் எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதிகளில் ‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் இயங்கி வந்தது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஐடி நிறுவனத்துக்கு பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள் உள்ளன. கோவையில் உள்ள இரண்டு கிளைகளில் சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

கோவை ஐடி ஊழியர்கள்

இந்நிலையில் அந்த நிறுவனம் கடந்த சனிக்கிழமை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் தங்களது நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதாக கூறி ஊழியர்களுக்கு மெயில் அனுப்பியுள்ளனர்.

ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை முறையாக சொல்லவில்லை. மேலும் ஊதியம் மற்றும் இதர சலுகைகள் குறித்தும் முறையான தகவல் சொல்லவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “இந்த மாதம் வரை முழுமையாக வேலை செய்துள்ளோம்.

கோவை ஐடி ஊழியர்கள்

 எல்லோருக்கும் இஎம்ஐ உள்ளிட்ட கமிட்மென்ட்கள் உள்ளன. பணி அனுபவ சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே மற்ற நிறுவனங்களில் முயற்சி செய்ய முடியும். அதனால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறினர்.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் இன்று கோவை தொழிலாளர் நல ஆணையம் அலுவலகம் சென்று முறையிட்டனர். பிரச்னை தீவிரமடைந்த காரணத்தால் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு ஒரு மெயில் அனுப்பியது. அதில், “அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படும்.

மெயில்

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு கிராஜுவிட்டி, ஜனவரி மாதம் வரையிலான தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்தும் முறையாக பின்பற்றப்படும். ஊழியர்களுக்கு உரிய காரணங்களுடன் பணி விலகலுக்கான ஆணை மற்றும் அனுபவ சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் வருமான வரி தொடர்பான ஃபார்ம் 16 இன்னும் 30-45 நாள்களில் வழங்கப்படும்.” என்று கூறியுள்ளனர். இதுகுறித்து தொழிலாளர் நல ஆணையத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதும் அந்த நிறுவனம் ஊழியர்களின் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தது. இதை ஊழியர்களும் ஏற்று கொண்டனர்.

கோவை ஐடி ஊழியர்கள்

கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றாவிடின் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனத்துக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஊழியர்கள் கலைந்து சென்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி' திமுக காங்கிரஸ் கூட்டணி இழுபறி; பின்னணியில் ஸ்டாலின் பிளான்

``புதுச்சேரிக்கு திராவிட மாடல் ஆட்சி தேவை...”புதுச்சேரி 2021 சட்டமன்றத் தேர்தலில் மதசார்பற்ற...

"திமுக கூட்டணியிலிருந்து அதிகாரபூர்வமாக விலகுகிறோம்"- த.வா.க தலைவர் வேல்முருகன் அதிரடி

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை...

'பரப்புரை குழுவில கூட நாட்டாமை பெயர் இல்லை' -பாஜகவுக்கு எதிராக கொந்தளிக்கும் சரத்குமார் ஆதரவாளர்கள்!

இரண்டாண்டுகளுக்கு முன்பு தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த...