1
February, 2026

A News 365Times Venture

1
Sunday
February, 2026

A News 365Times Venture

விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு – தவெக சொல்வதென்ன?

Date:

வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வேலூர் அடுத்துள்ள அகரம்சேரியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, பிரமாண்டமான வெளிப்புற மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் விசாலமான, பாதுகாப்பான இடமாகவும், அவைக் கண்டறியப்பட்டுள்ளது. காவல்துறையினரின் மேற்பார்வையில் 7 ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் மைதானத்தைச் சமன்படுத்தும் பணியில் த.வெ.க-வினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இடம் சீரமைக்கும் பணி

இது பற்றி, த.வெ.க-வின் வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகனிடம் கேட்டபோது, “த.வெ.க தலைமை அலுவலகத்தில் இருந்து ஓரிரு நாளில், தளபதி வருகைக் குறித்த தேதி அறிவிக்கப்படும். அதன் பிறகு, காவல்துறையினரிடம் அனுமதி கேட்போம். அதற்கு முன்னதாக, இடத்தை சமன்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். 25,000 பேர் கலந்துகொள்ளும் வகையில் 26 ஏக்கரில் இருந்து 30 ஏக்கர் வரையிலான விசாலமான இடத்தைத் தான் தேர்வு செய்திருக்கிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்யவும் 50 ஏக்கர் இடத்தை பார்வையிட்டு வருகிறோம்’’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Epstein File-ல் மோடியின் பெயர்; பூகம்பம் கிளப்பும் அமெரிக்கா; மத்திய அரசின் பதில் என்ன?

எப்ஸ்டீன் ஃபைல் - இது ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்கிற பாலியல் குற்றவாளியின்...

திமுக – காங்கிரஸ் பஞ்சாயத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி – என்னதான் நடக்கிறது அங்கே?

திமுக, காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்கெனவே புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இருதரப்பினரும் மாறி...

நாஞ்சிக்கோட்டை: பூட்டியே கிடக்கும் பொதுக் கழிவறை; அவதியுறும் மக்கள்- நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் உள்ள கழிவறை பயன்பாடு...

'நாட் ரீச்சபிளில் இருப்பவர்கள் பற்றி கேட்காதீங்க' – விஜய் குறித்து செந்தில் பாலாஜி விமர்சனம்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது....