14
July, 2025

A News 365Times Venture

14
Monday
July, 2025

A News 365Times Venture

வாய்ப்பு பறிபோன கடுப்பு; புகைச்சலில் கமலாலயம் டு நடிகையின் நிலம்; வார்னிங் கொடுத்த மேலிடம் | கழுகார்

Date:

அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் தலைவராக்கப்பட்டதை, பா.ஜ.க-விலுள்ள முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் மகிழ்ச்சியாக வரவேற்பதுபோலக் காட்டிக்கொண்டாலும், “தனக்குக் கிடைக்கவேண்டிய பொறுப்பு மிஸ் ஆகிடுச்சே…” என்ற கடுப்பில்தான் இருக்கிறார்களாம் அத்தனை பேரும். ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், இராம.ஸ்ரீநிவாசன், கரு.நாகராஜன், ஏ.பி.முருகானந்தம் போன்ற முக்கியப் புள்ளிகள் ஒரு பக்கம் கடுப்பில் இருக்க, சமுதாயரீதியான கணக்குகளால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனச் சிலர் வாய்ப்பை எதிர்பார்த்திருந்தனர்.

பாஜக

அதில், தேவேந்திர குல வேளாளர்களை பா.ஜ.க பக்கம் கொண்டுவர பல ஆண்டுகளாக முயன்றுவரும் சுப.நாகராஜனும் பொன்.பாலகணபதியும் தங்களுக்குத்தான் தலைவர் பதவி கிடைக்குமென எதிர்பார்த்திருந்தனர். அதேவேளையில், அகமுடையார் சமூக மக்களிடம் நல்ல அறிமுகமுள்ள குப்புராமு, கருப்பு முருகானந்தம், செளராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த மகாலட்சுமி எனப் பலரும் வாய்ப்புக்காகக் காத்திருந்தனர். ஆனால், போட்டியே இல்லாமல் நயினாருக்குத் தலைவர் பதவி கிடைத்ததில், பலரும் ஏக வருத்தத்தில் இருக்கிறார்களாம். இது விரைவில் கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தும் என்கிறது கமலாலய வட்டாரம்!

தூத்துக்குடி நெடுஞ்சாலைக் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து, தனது தொகுதியான திருச்செந்தூரில் ஒரு கோட்டத்தை அமைக்க, அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாகவே முயன்றுவந்தார். அதற்குள் புகுந்து ஆட்டத்தைக் கலைத்துவிட்டாராம் அமைச்சர் கீதா ஜீவன். ‘தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க எல்லைக்கு உட்பட்ட கோவில்பட்டி தொகுதியில், தி.மு.க-வுக்குச் சில இடங்கள் வீக்காக இருக்கின்றன.

அனிதா ராதாகிருஷ்ணன்

கோவில்பட்டி எம்.எல்.ஏ-வாகத் தொடர்ந்து வெற்றிபெற்றுவரும் கடம்பூர் ராஜூவின் இமேஜைக் குறைக்க வேண்டுமென்றால், அந்தத் தொகுதியில் சில வளர்ச்சிப் பணிகளை நாம் காட்டியாக வேண்டும்’ எனக் கட்சித் தலைமையிடம் சொல்லி, நெடுஞ்சாலைக் கோட்டத்தை கோவில்பட்டிக்குக் கொண்டுசென்றுவிட்டதாம் அமைச்சர் கீதா ஜீவன் தரப்பு. தனது முயற்சிகளெல்லாம் புஸ்வணாமாகிவிட்டதால், கடும் அப்செட்டில் இருக்கிறாராம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!

நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையும், அவரது 75-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாகவும், வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் பிரமாண்டப் பாராட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாட்டை லதா ரஜினிகாந்த் செய்துவருகிறாராம். அந்த விழாவுக்கு, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அழைத்திருக்கிறதாம் லதா தரப்பு.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

டெல்லியிலிருந்து பாசிட்டிவ் சிக்னல் கிடைத்திருப்பதால், விழா ஏற்பாடுகள் மும்முரமாகின்றனவாம். ரஜினிக்குச் சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தில், விழா ஏற்பாடுகள் குறித்து முக்கியமான மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டமும் நடந்திருக்கிறது. ‘இந்த விழாவுக்கு அ.தி.மு.க தலைவர்களையும் அழைக்க வேண்டும்…’ என்று சிலர் ஆலோசனை சொல்ல, ‘ஜெயலலிதாவைக் கடுமையாக ஒருகாலத்தில் விமர்சித்தவர் ரஜினி. பிற்பாடு, அதையெல்லாம் ஜெயலலிதாவே மறந்துபோயிருந்தாலும், இப்போதிருக்கும் அ.தி.மு.க தலைவர்கள் மறந்துவிட்டு நிகழ்ச்சிக்கு வருவார்களா..?’ என ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறதாம் ரஜினி தரப்பு!

1990-களில் கோலோச்சிய பிரபல நடிகை ஒருவருக்கு, சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் 50 ஏக்கர் நிலம் இருக்கிறதாம். அந்த நிலத்தை விற்க முடிவுசெய்த நடிகை, ஒற்றை எழுத்து ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் விலை பேசினாராம். இடத்தை வாங்கிக்கொள்வதாகச் சொன்ன அந்த நிறுவனம், எந்த ஒப்பந்தமும் போடவில்லையாம். ஓராண்டாகக் காத்திருந்த நடிகை, தற்போது அந்த இடத்தை வேறொருவரிடம் விற்க விலை பேசினாராம்.

தகவலைக் கேள்விப்பட்டுக் கடுப்பான அந்த ஒற்றை எழுத்து நிறுவனம், ‘எங்ககிட்ட விலை பேசின பிறகு, வேறொருவருக்கு எப்படி கொடுக்க முயற்சி செய்யலாம்…’ என சைலன்ட்டாக மிரட்டியதோடு, அடிமாட்டு விலைக்கு இடத்தைக் கேட்டிருக்கிறார்கள். டென்ஷனான அந்த நடிகை, ஆளுங்கட்சி மேலிடத்திடம் விஷயத்தைக் கொண்டுபோயிருக்கிறார். அவர்கள் தலையிட்டு வார்னிங் கொடுத்த பிறகுதான், ஒற்றை எழுத்து நிறுவனம் பின்வாங்கியதாம்!

பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்த சமயத்தில், பல சுவாரஸ்யங்கள் நடந்திருக்கின்றன. மகாராஜன் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததை, அங்கிருந்த சீனியர்கள் தடுத்து விரட்டியது ஒருபுறமிருக்க, தன்னுடைய ஆதரவாளர்கள் இரண்டு பேரை வேட்புமனு தாக்கல் செய்யச் சொல்லி அனுப்பியிருந்தாராம், ‘ஜோதி’ மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க சீனியர். அவர்களும் சீனியரின் பேச்சை நம்பி, மனுவைத் தாக்கல் செய்ய கமலாலயத்துக்கு வந்திருக்கிறார்கள்.

அலுவலகத்திலிருந்தவர்கள் அவர்களைத் தடுத்து விசாரித்துவிட்டு, சீனியருக்கு போன் போட்டு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள். ‘இதோ வந்துடுறேன்… நீங்க அங்கேயே நில்லுங்க…’ எனச் சொன்ன அந்த சீனியர், கடைசிவரை கமலாலயம் பக்கம் வரவே இல்லையாம். விஷயம், ஐ.டி.சி ஹோட்டலில் இருந்த பெருந்தலைகளுக்குச் சொல்லப்படவே, தற்போது அந்த சீனியர்மீது விசாரணை நடத்தப்படுகிறதாம். ‘அவர் இருக்கும் பதவி பறிபோய்விட்டது. அடுத்த மாநில நிர்வாகிகள் பட்டியலில் அவர் பெயர் இருக்காது’ என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...