12
February, 2026

A News 365Times Venture

12
Thursday
February, 2026

A News 365Times Venture

`ராகுல் காந்தியின் எம்.பி பதவியைப் பறிக்க வேண்டும்!' – நிஷிகாந்த் துபே தீர்மானம் தாக்கல்

Date:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துவதாகக் குற்றம்சாட்டி, பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே மக்களவையில் வியாழக்கிழமை ‘தனி நபர் தீர்மானம்’ (Substantive Motion) ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த தீர்மானத்தில், `ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறிப்பதோடு, அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என்றும் கோரப்பட்டிருக்கிறது.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்தியாவை அமெரிக்காவிடம் பிரதமர் மோடி விற்றுவிட்டார். விவசாயிகளுக்கு எதிராக அமெரிக்க பொருள்களுக்கு இந்தியக் கதவை திறந்துவிட்டிருக்கிறார். நாம் எங்கு எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்காதான் முடிவு செய்கிறது. நம் சுயமரியாதையை இழந்து, அடிமையைப் போல அமெரிக்காவிடம் இந்தியா உரையாற்றியிருக்கிறது” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

நிஷிகாந்த் துபே

இந்த நிலையில்தான் எம்.பி நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “நாட்டைப் பலவீனப்படுத்த விரும்பும் ஜார்ஜ் சோரோஸ் போன்ற சக்திகளின் உதவியுடன் ராகுல் காந்தி நாட்டை தவறாக வழிநடத்துகிறார்.

இது குறித்து இன்று மக்களவையில் நான் தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன். ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குத் தகுதியற்றவர். அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட வேண்டும்.” என்றார்.

இதற்கு முன்பே, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “ராகுல் காந்தி சபையை தவறாக வழிநடத்தியதற்காகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததற்காகவும் பா.ஜ.க உறுப்பினர்கள் ‘அவமதிப்பு நோட்டீஸ்’ தாக்கல் செய்வார்கள்” என்று கூறியிருந்தார். ஆனால், எம்.பி நிஷிகாந்த் துபே அதைவிட தீவிரமான ‘முதன்மைத் தீர்மானம்’ தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு; காவல்துறையினர்மீது நான்கு பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல்

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த...

நாளை நடக்கவிருந்த செவிலியர் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி ரத்தா? – கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

கோவிட் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு சென்னையில் நாளை பணி...

வடகொரியா: அதிகாரத்தின் அடுத்த வாரிசு; தலைமைப் பொறுப்புக்கு மகளை முன்னிறுத்தும் கிம் ஜாங் உன்!

வடகொரியாவின் உச்சபட்ச அதிகார மையமாகத் திகழும் கிம் ஜாங் உன், கடந்த...

'காங்கிரஸின் தவறு தான் அது'; சுட்டிக்காட்டிய மாணிக்கம் தாகூர் – 2006 தேர்தலில் நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்குள்...