அதிமுக – பாஜக கூட்டணி குறித்து இன்று மதிமுக பொதுச்செயலாளர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது…
“எக்காரணத்தை கொண்டும் பாஜக உடன் கூட்டணி வைக்கமாட்டோம் என்று அதிமுக அண்மையில் கூறியது. பாஜகவின் சில கொள்கைகள் குறித்து கூட விமர்சனம் செய்தது.
பின்னர், டெல்லிக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றார், செங்கோட்டையன் இரண்டு முறை டெல்லிக்கு சென்றார். சென்னை வந்த அமித் ஷா ‘அதிமுக தலைமையில் கூட்டணி’ என்று அறிவித்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
அதிமுக தலைமையில் கூட்டணி அமைகிறது என்றால் ஐந்து நிமிடமாவது எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை வரவேற்று பேசியிருக்க வேண்டும். பின்னர், அமித் ஷா பேசியிருந்தால் ஆரோக்கியமான கூட்டணியாக இருந்திருக்கும்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி மௌனசாமியைப் போல அமைதியாக அமர்ந்திருந்தார். அமித் ஷாவின் பேச்சிலும் தமிழ்நாட்டிற்கு சாதகமான எந்த அறிவிப்பும் இல்லை.
இந்தக் கூட்டணி நிலைக்குமா… நீடிக்குமா அல்லது மூன்று, நான்கு வாரத்திற்குள் முடிந்துவிடுமா?” என்று கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
