18
March, 2025

A News 365Times Venture

18
Tuesday
March, 2025

A News 365Times Venture

மோடியின் நேர்காணலில் ட்ரம்ப் குறித்த பேச்சு… வீடியோவை பகிர்ந்த ட்ரம்ப்; நன்றி பாராட்டிய மோடி

Date:

இந்திய பிரதமர் மோடியிடம் நேர்காணல் செய்த லெக்ஸ் ஃப்ரிட்மேன் பாட்காஸ்டை நிகழ்ச்சியை தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அந்தப் பாட்காஸ்ட்டில் இந்திய பொருளாதாரம், வறுமை, பாகிஸ்தான், சீனா என பலவற்றை பற்றி பகிர்ந்திருந்த மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவருடனான உறவு குறித்தும் கூறியிருந்தார்.

ட்ரம்ப்பின் கொள்கைகள், அவருடன் பணிபுரிவது, அவரது தலைமை பண்பு பற்றிய பேசிய மோடி, 2019-ம் ஆண்டு அமெரிக்காவில் அவருக்கு நடந்த ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சி குறித்தும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க வெள்ளை மாளிகையை ட்ரம்பே தனக்கு சுற்றி காட்டினார் என்றும், அதைப் பற்றிய வரலாற்றை எந்த குறிப்புகளும் இல்லாமல் கூறினார் என்றும் பாட்காஸ்ட்டில் நினைவு கூர்ந்திருந்தார் மோடி.

ட்ரூத்தில் இணைந்த மோடி!

“சமீபத்தில் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருந்தாலும், ‘தேசம் தான் முதலில்’ என்ற அவரின் கொள்கையை வெகுவாக வியக்கிறேன்” என்று ட்ரம்பை பாராட்டியிருந்தார் மோடி.

இந்தப் பாட்காஸ்டை ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ட்ரம்ப். அதற்காகவே, ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் இணைந்து பிரதமர் மோடி, “நன்றி, எனது தோழரே, அதிபர் ட்ரம்ப். நான் பாட்காஸ்ட்டில் எனது வாழ்க்கை பயணம், இந்தியா, உலக நடப்புகள் என பலவற்றை குறித்து பேசியுள்ளேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

மோடி ட்ரூத் வலைதளத்தில் இணைந்திருப்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இந்த வலைதளத்தை ட்ரம்ப்பும், அவரின் ஆதரவாளர்களும், அமெரிக்காவில் உள்ள பழமைவாதிகள் தான் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Trek Tamilnadu: `3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா' – முதல்வர் ஸ்டாலின்

கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 40 இடங்களில் மலையேற்றம்...

தென்காசி: அரசு அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட முன்னாள் முதல்வர் புகைப்படம்; அதிமுக-வினர் கண்டனம்!

தென்காசி நகரப் பகுதியில் புது பஸ்டாண்ட் செல்லும் வழியில் வருவாய் கோட்டாட்சியர்...