1
July, 2025

A News 365Times Venture

1
Tuesday
July, 2025

A News 365Times Venture

மோடிக்கு `ஓகே’ சொன்ன ட்ரம்ப் – அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் மும்பை தாக்குதல் குற்றவாளி!

Date:

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 26 வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு நாட்களுக்கும் மேலாக நடந்த இத்தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் பாகிஸ்தான் தொழிலதிபர் தஹாவ்வூர் ஹுசைன் ராணாவிற்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மும்பை போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தஹாவ்வூர் ராணா 2008ம் ஆண்டு நவம்பர் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அதே மாதம் 11ம் தேதி இந்தியாவிற்கு வந்துவிட்டு அதேமாதம் 21ம் தேதி வரை இருந்துவிட்டு சென்றுள்ளான்.

மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல்

ராணாவிற்கு மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராணாவும், டேவிட் ஹட்லீயும் இணைந்து இந்த தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியுள்ளனர். ராணா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுடன் தாக்குதல் தொடர்பாக தொடர்பு கொண்டு பேசி இருக்கிறான். ராணாவும், டேவிட்டும் இது தொடர்பாக இமெயில் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்தது. இதில் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் தீவிரவாதத்திற்கு உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளான்.

இதையடுத்து ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் தன்னை நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து ராணா அமெரிக்க கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தான். அவனது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. தற்போது நாடு கடத்துவது ஒன்றுதான் பாக்கியாக இருந்தது. இதற்கு அமெரிக்க அரசின் ஒப்புதல் தேவையாக இருந்தது. தற்போது பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தீவிரவாதி ராணாவை நாடு கடத்தவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

டொனால்டு டிரம்ப் அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பேச்சுவார்த்தைப்பிறகு ராணா இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவான் என்று ட்ரம்ப் தெரிவித்தார். இதையடுத்து பல ஆண்டு போராட்டத்திற்கு இந்தியாவிற்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. விரைவில் ராணா மும்பைக்கு நாடு கடத்திக்கொண்டு வரப்படுவான் என்று தெரிகிறது. முதல் கட்டமாக இந்திய அதிகாரிகள் ராணாவிடம் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...