4
March, 2026

A News 365Times Venture

4
Wednesday
March, 2026

A News 365Times Venture

'முடிந்தது பஞ்சாயத்து; காங்கிரஸூக்கு எத்தனை சீட்?' – அறிவாலயத்தில் என்ன நடந்தது?

Date:

இழுபறியில் நீடித்து வந்த திமுக காங்கிரஸ் கூட்டணியின் பஞ்சாயத்துகள் அத்தனையும் ஒரு வழியாக ஓய்ந்திருக்கிறது. அறிவாலயத்தில் முதல்வர் முன்னிலையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.

Congress

திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிவை நோக்கி சென்ற நிலையில், டெல்லியின் உத்தரவின் பேரில் ப.சிதம்பரம் கடைசி நிமிடத்தில் முதல்வருடன் பேசி கூட்டணியை இறுதி செய்திருந்தார். இந்நிலையில், இன்று திமுக – காங் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல் ஓடிக்கொண்டிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வர கோவாவிலிருந்து விமான டிக்கெட்டும் புக் செய்திருந்தார்.

கிரிஷ் சோடங்கர் 3:50 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்துவிட்டார். அவரை வரவேற்க செல்வப்பெருந்தகையும் சென்றிருந்தார்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காங்கிரஸ் குழு விமான நிலையத்திலேயே காத்திருந்தது. திமுக தரப்பில் ஒரு நம்பரை சொல்ல அதற்கு டெல்லி தலைமையிடம் ஒப்புதல் வேண்டி காங்கிரஸ் குழு காத்திருந்ததாக தகவல். இந்த இழுபறி சில மணி நேரங்களுக்கு நீடித்து பரபரப்பை கூட்டியது.

Cong
Cong

நீண்ட காத்திருப்புக்கு பிறகு காங்கிரஸ் குழு அறிவாலயம் நோக்கி புறப்பட, இரவு 7:30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு போன்றோர் அறிவாலயம் வந்தனர். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை போன்றோரும் வர முதல்வர் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

செல்வப்பெருந்தகை பேசுகையில், ’28 சட்டமன்ற தொகுதிகளும் 1 மாநிலங்களவை சீட்டும் காங்கிரஸூக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் இல்லை. கூட்டணி சரியான சமயத்தில் அமைந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்.’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'டெல்லி தலைமையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.!' – பேச்சுவார்த்தை தாமதம் குறித்து செல்வப்பெருந்தகை

ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை, 30 சட்டசபை...

'ராகுல் பனையூருக்கு வரணுமா?' – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

அறிவாலயமும் சத்யமூர்த்தி பவனமும் பெரும் போராட்டத்தை கடந்து ஒருவழியாக தொகுதி பங்கீடு...

'அந்த ஒரு காரணத்துக்குதான் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டோம்!' – கிரிஷ் சோடங்கர் அதிரடி

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு 28 சீட்களும் ஒரு ராஜ்ய சபா சீட்டும்...

'இந்தியில் பெயர் பலகை' – திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுக-வினர்

திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம்...