19
February, 2026

A News 365Times Venture

19
Thursday
February, 2026

A News 365Times Venture

`மாநகராட்சியாக மாறும் புதுச்சேரி நகராட்சிகள்!' – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

Date:

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 12-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவாதமும், எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தும் வருகின்றனர்.

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளம் ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று அறிவித்தார்.

புதுச்சேரி அரசு

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், “நீட் பயிற்சி பெறுவதற்கு இதுவரை 585 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

புதுச்சேரி நகரப் பகுதிகளில் இரண்டு, கிராமப்பகுதிகளில் இரண்டு மற்றும் காரைக்காலில் ஒரு நீட் பயிற்சி மையங்கள் அரசு சார்பில் உருவாக்கப்படும். மேலும் 2025 கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளி நாட்களிலும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வடிவேலுவை வைத்து வசை பாடிய திமுக; கட்சியை உடைத்த அதிமுக! – தேர்தலில் தேமுதிக கடந்த பாதை!

தேசிய முற்போக்கு திராவிட கழகம், முதல் முறையாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது...

`தேர்தலில் எதிர்த்ததால் 5 வருடம் சம்பளம் போடவில்லை!' – திமுக நிர்வாகிக்கு எதிராக குமுறும் ஆபரேட்டர்

கும்பகோணம், திருப்பனந்தாள் அருகே உள்ள மணலூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரின்...

"திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது மக்களின் மனநிலைக்கு நேர்மாறாக உள்ளது!" – ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர்,...

'ஓ.பி.எஸ்க்காக உயிரை விட முடியுமா?' – 89 வயதில் புதுக்கட்சி தொடங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்

ஓ.பி.எஸ் ஆதரவாளராக இருந்த மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் புதிதாக 'எம்.ஜி.ஆர்...