13
February, 2026

A News 365Times Venture

13
Friday
February, 2026

A News 365Times Venture

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

Date:

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.

அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் நேற்று ‘India Today’ ஊடகத்தின் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஸ்டாலின் , “ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று காங்கிரஸுக்கும் நன்றாக தெரியும்.

முதல்வர் ஸ்டாலின்

திமுக கூட்டணி நன்றாக இருக்கிறது. தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வலுவாகத் தொடரும்.

மற்றவர்கள் நினைப்பது நடக்காது. அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னை ஒரு சகோதரனாகப் பார்க்கிறார்.

நானும் அவரை அப்படித்தான் பார்க்கிறேன். எத்தனை கூட்டணி தமிழகத்தில் அமைந்தாலும் தேர்தலில் திமுக தான் வெல்லும்” என்று பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை… 2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழக காங்கிரஸின் தவறு தான்” என்று பதிவிட்டிருந்தார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

இந்நிலையில் மீண்டும் ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில், “தோழமையில் மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மகளிருக்கு ரூ.5000: `பாராளுமன்ற தேர்தல் போதும்கூட முடக்கப்படவில்லை' – கொந்தளிக்கும் தமிழிசை

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்...

கலைஞர் உரிமைத் தொகை: “வங்கி கணக்கில் ரூ.5000" – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது....

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" – நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு...

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' – தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு...