18
February, 2026

A News 365Times Venture

18
Wednesday
February, 2026

A News 365Times Venture

'போர் முடிவுக்கு வர அமெரிக்கா முக்கியம்…' – வெள்ளை கொடியைப் பறக்க விடும் ஜெலன்ஸ்கி!

Date:

கடந்த வாரம் அமெரிக்காவில் நடந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சந்திப்பு படுதோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று பல்வேறு மக்களுக்கு, ‘அடுத்து அமெரிக்கா உடனான உக்ரைன் உறவு என்ன ஆகும்?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

நான் உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் அமெரிக்காவில் இருக்கும் அவர்களது சக ஊழியர்களை தொடர்பு கொள்ளுமாறும், அவர்களிடம் இருந்து அலுவல் தகவல்களை பெறுமாறும் கேட்டுள்ளேன்.

உக்ரைனுக்கும், அமெரிக்காவிற்கு இடையே மரியாதையான பேச்சுவார்தை நடக்க வேண்டும். ஒருவருக்கு மற்றொருவரின் நிலைப்பாடு தெரிய வேண்டும். முக்கியமாக, முழுப்போரில் மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

போர் முடிவுக்கு வர அமெரிக்கா முக்கியம்…

இது 2022-ம் ஆண்டு அல்ல. நாம் மிக பலமாக இப்போது உள்ளோம். நம்மால் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

ஆனால், இந்தப் போரை நிறுத்த அமெரிக்காவுடனான உறவு மிக முக்கியம். யாருக்குமே முடிவில்லா போர் வேண்டாம். ஐரோப்பாவில் இருக்கும் அனைவரும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை கேட்கிறோம்.

பேச்சுவார்த்தைக்கு பதிலாக வெள்ளை மாளிகையில் நடந்த விஷயத்திற்கு வருந்த மட்டும் தான் முடியும். எப்படி நாம் எப்போதும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அனைத்து கூட்டாளிகளையும் மதிக்கிறோமோ அப்படி ஒருவர் மீது ஒருவர் அமெரிக்கா மற்றும் உக்ரைன் மரியாதை கொள்ள வேண்டும். அடுத்ததாக அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

உக்ரைன் சம்பந்தமாக ரஷ்யா தங்களது நிலைபாட்டையும், டிமாண்டையும் இன்னும் மாற்றவில்லை என்பது நன்கு தெரியும். ஆனால், உக்ரைனுக்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்கும் வரை, நம்மை யாராலும் வெற்றி கொள்ள முடியாது” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பட்டா இருந்தும் மின்சாரம் இல்லை' – 31 ஆண்டுகளாக இருளில் வாழும் 138 அருந்ததியர் குடும்பங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வடஆண்டிப்பட்டு கிராமம், கௌதம புத்தர் நகரில்...

நடிகை பிரதியுஷா மரண வழக்கு: 24 ஆண்டுகள் கழித்து வெளியான தீர்ப்பு; காதலனுக்கு செக்!

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பிரதியுஷா....

"அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பதில் தவறு கிடையாது!" – சொல்கிறார் தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்...

"அந்த போன்கால் வரட்டும்!" – காத்திருக்கும் அறிவாலயம்

நேற்று பிப்.17-ம் தேதி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவர்கள் கூட்டம்...