21
March, 2026

A News 365Times Venture

21
Saturday
March, 2026

A News 365Times Venture

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Date:

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-. மேலும் எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் ரூ.49,632/-, ஹெச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கில் ரூ.98,241/- இருக்கிறது.

இவற்றுடன் இரண்டு யமஹா பைக்குகளும், ஹோண்டா சிட்டி, கியா கார்னிவல் என இரண்டு கார்களும் இருக்கின்றன. மேலும் தலா 12 கிராமில் ஒரு செயின், ஒரு மோதிரம் என ரூ.21,25,752/- மதிப்புடையவை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முதல்வர் ரங்கசாமி

அதேபோல தட்டாஞ்சாவடி பகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் 20,000 சதுர அடியில் ஒரு இடமும், ரூ.12 கோடி மதிப்பில் 25,000 மற்றும் 40,000 சதுர அடியில் இரண்டு இடங்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

அதில் 2,400 சதுர அடியில் ரூ.28 லட்சம் மதிப்பில் ஒரு கட்டிடம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.27.78 கோடி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல கோகுலகிருஷ்ணன் மற்றும் வேல்முருகன் உள்ளிட்ட இருவரிடம் ரூ.35 லட்சம் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் முதல்வர் ரங்கசாமி.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி...

"நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி" – கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில்...

58 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த ஜோதிடரை, கடவுளுடன் ஒப்பிட்ட பெண்கள் கமிஷன் தலைவி! பகீர் பின்னணி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அசோக் கராட் என்பவர் தன்னிடம் ஜோதிடம் கேட்க...

"CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை?" – ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது...