6
March, 2026

A News 365Times Venture

6
Friday
March, 2026

A News 365Times Venture

"பீகார் நிதீஷ் குமாரின் நிலை எடப்பாடி பழனிசாமிக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கும்" – மாணிக்கம் தாகூர்

Date:

”தி.மு.கவும், காங்கிரஸும் வேறு வேறு கட்சிகள். கொள்கைகளும் வேறுதான். ஆனால், தேர்தல் என்று வரும்போது எல்லா கட்சியினரும் சில தியாகம் செய்தால்தான் வெற்றிக் கூட்டணியை உருவாக்க முடியும்” என, விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.

விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கர்நாடக மாநிலத்தில், கடந்த 2023-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி காலத்தில் மக்களின் வரிப்பணத்தில் பிரதமரின்  நிகழ்ச்சிக்கு ரூ.30 கோடி செலவழித்து இருப்பது தற்போது ஆர்.டி.ஐ தகவலில் வெளி வந்துள்ளது.  

இது மிகவும் கேவலமாகச் செயல். பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரை பா.ஜ.க. வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கி இருக்கிறார்கள்.  

மாணிக்கம் தாகூர்

கூட்டணிக் கட்சியினரை மோடி மற்றும் அமித்ஷா எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு நிதீஷ் குமார் ஒரு உதாரணம். இது ஒன்றே எடப்பாடி பழனிசாமிக்குப் பயத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஒரு மாநிலத்தில் முதல்வரை வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்துவிட்டு மாநிலங்களவை உறுப்பினராக இருப்பது என்பது பீகாரை பா.ஜ.க முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது என்பதை அனைவரும் அறிவர்.

இதே போன்ற நிலைமை, தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க.,வால் ஏற்படக்கூடாது, எடப்பாடி பழனிசாமி, தினகரன், அன்புமணி போன்றவர்கள் வரலாற்று பிழையைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.  

தி.மு.க.,வும் காங்கிரஸும் வேற வேற கட்சிகள்தான். கொள்கைகளும் கோரிக்கைகளும் வேறு வேறு  என்பது இருந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், தேர்தல் என்று வரும்போது காங்கிரஸும் தியாகம் செய்ய வேண்டும், தி.மு.க.,வும் தியாகம் செய்ய வேண்டும்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகளும் தியாகம் செய்ய வேண்டும். எல்லோரும் தியாகம் செய்தால்தான்  வெற்றிக்கூட்டணியை உருவாக்க முடியும். இதுதான் கூட்டணிக்கான மிக முக்கியமான தத்துவம். இந்தத் தத்துவத்தை காங்கிரஸ்காரர்கள் புரிந்து கொண்டவர்கள்.

கூட்டணிக்காக காங்கிரஸ் கட்சி பல தியாகங்களைச் செய்தவர்கள். இந்த முறையும் தியாகம் செய்திருக்கிறோம். தியாகம் செய்தால்தான் கூட்டணி கட்சியினரை வெற்றி பெற வைக்க முடியும்” என்றார்.  

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான் மீதான போர்: கச்சா எண்ணெய்; `இந்தியாவுக்கு 30 நாளுக்கு மட்டும் அனுமதி' – அமெரிக்கா| முழு விவரம்

அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கூடுதல்...

ஈரான்: “இந்தியாவின் விருந்தாளி" – அமெரிக்காவால் தாக்கப்பட்ட கப்பல் குறித்து ஈரான்!

கடந்த மாதம், இந்தியாவின் விசாகப்பட்டினத்தில், 'MILAN 2026' என்கிற மிகப்பெரிய கப்பற்படைப்...