சமீப நாள்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை பேசி வருகிறார்.
இதற்கு பெரியாரிய இயக்கங்கள், திமுக தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை தலைவராக பார்க்கப்படும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனோடு சீமான் இருக்கும் புகைப்படம் போலி என்று பதிவிட்டு வருகின்றனர். இப்படி பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்கள் சீமான் இருக்கிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3000 நிர்வாகிகள் இன்று சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கின்றனர். நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாம் தமிழர் கட்சியில் மாணவர் அணி தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். சீமானை கடுமையாக விமர்சித்து பேசிய அவர்,” தனது வயிற்று பிழைப்புக்காக கட்சி நடத்துகிறார்.
திரைத்துறையை சேர்ந்த பல்வேறு நடிகர்களிடமும் தயாரிப்பாளர்களிடமும் காசு வாங்கி பிழைப்பு நடத்துகிறார் சீமான். சீமான் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் போலியானது தான். அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டு வந்தது, அந்த ஹார்டு டிஸ்க்கை வாங்கி சீமானிடம் கொடுத்ததே நான்தான்.
பிரபாகரனை சீமான் சந்தித்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் புகைப்படம் போலியானது. ஈழ போராட்டத்திற்காக சீமான் என்ன செய்தார்? ஒன்றும் செய்யவில்லை. விவாதிக்க தயாரா? பெண் செய்தியாளர்களின் கேள்விக்கு நாகரீகமின்றி சீமான் பதில் அளித்துள்ளார். சீமான் பேசுவது எல்லாமே பொய்தான். சீமான் ஒரு தற்குறி” என்று ராஜீவ் காந்தி விமர்சித்திருக்கிறார்.