செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி இருக்கிறார்.
அடிக்கல் நாட்டு விழாவில் தேசிய கல்வி கொள்கைக் குறித்தும் தர்மேந்திர பிரதான் குறித்தும் ஸ்டாலின் பேசியிருக்கிறார். கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனைத் திட்டங்களும் தேசிய கல்வி கொள்கையில் இருக்கிறது.
கல்வியைத் தனியார் மயமாக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வியை ஏற்படுத்துவது, கல்வியை மதவாதத்துடன் புகுத்துவது, கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் நீட் மாதிரியான நுழைவு தேர்வு, சிறு பிள்ளைகளுக்கும் பொதுத்தேர்வு என நிறைய விஷயங்கள் இருக்கிறது. அதனால்தான் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்கிறோம்.
ஆனால் இதை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று தர்மேந்திர பிரதான் பிளாக் மெயில் செய்கிறார். ரூ.2000 கோடி இல்ல, நீங்கள் ரூ.10,000 கோடி தந்தாலும் உங்கள் நாசகாரத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டோம். நேற்று தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நாகரிகம் இல்லாதவர்கள் என்று பேசியிருக்கிறார்.

பிரதான் திமிராக நாடாளுமன்றத்தில் நாவடக்கம் இல்லாமல் பேசியிருக்கிறார். ஆனால் அவர் பேசிய அரைமணி நேரத்தில் நம் எம்.பிக்கள் அவர் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெற வைத்திருக்கின்றனர். போர்க்கொடி தூக்கிய நம்முடைய எம்.பிக்களுக்கு எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs