31
March, 2026

A News 365Times Venture

31
Tuesday
March, 2026

A News 365Times Venture

பாலியல் புகாரில் IPS அதிகாரி சஸ்பெண்ட்: “குடும்பத்தை அவமானப்படுத்த நோக்கம்'' – DGP-யிடம் மனைவி மனு

Date:

சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகப் பணியாற்றி வரும் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் திடீரென இடைநீக்கம் செய்யப்படிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த நடவடிக்கையானது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவர், டி.ஜி.பி அலுவலகத்தில் மகேஷ்குமார் மீது அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து இணை கமிஷனர் மகேஷ்குமார்

இந்த நிலையில், தங்களின் குடும்பத்தை அவமானப்படுத்தும் நோக்கில் தன் கணவர் மீது இத்தகைய புகார் அளிக்கப்பட்டிருப்பதாக மகேஷ்குமாரின் மனைவி குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகேஷ்குமாரின் மனைவி மற்றும் அவர் தரப்பு, “பொய்யான புகாரை அளித்திருக்கிறார்கள். நேற்று நள்ளிரவு சம்மன் வந்த சிறிது நேரத்தில் சஸ்பெண்ட் என்று ஊடகங்கள் மூலம் தெரியவந்தது. எங்களின் நியாயம் கேட்கப்படவில்லையோ என்று ஆதங்கமாக இருந்தது.

மகேஷ்குமார் ஐபிஎஸ்

அதனால், விசாகா கமிட்டி யாருக்கும் சாதகமாகவும், பாதகமாகவும் இல்லாமல், எது நியாயமோ அந்த நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே வேண்டுகோள். அதனால், நியாயமாக விசாரிக்க வேண்டும் என்று டிஜிபி சாரிடம் மனு கொடுத்திருக்கிறோம். விசாகா கமிட்டியில் கேட்கும்போது ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படும். எங்கள் குடும்பத்தை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நபர் புகாரளித்திருக்கிறார். நியாயமான தீர்ப்பு எங்களுக்கு கிடைக்கும்.” என்று தெரிவித்தனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தமிழ்குமரன் காங்கிரஸில் சேர்ந்தது முதல் பாமக-விலிருந்து நீக்கப்பட்டது வரை! – நடந்தது என்ன?

குடும்பத்திற்குள் ஏற்பட்ட பிரச்னையால் இரண்டாகப் பிளவுபட்ட பாமக-வில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான...

கட்சித் தாவும் தலைவர்கள்… அதிருப்தி அலையால் அல்லாடும் காங்., பாஜக – `அதகள' அஸ்ஸாம் தேர்தல் களம் !

காங்கிரஸ் டு பாஜகஇந்திய அரசியலில் வடகிழக்கு மாநிலங்களின் நுழைவுவாயிலாகக் கருதப்படும் மாநிலம்,...

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 : வேட்புமனு முதல் வேட்பாளர்கள் வரை.! key Details | Full schedule

தேர்தல் அறிவிப்பு :தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய நான்கு...