12
February, 2026

A News 365Times Venture

12
Thursday
February, 2026

A News 365Times Venture

'நேரு தவிர்த்ததையும் சேர்த்து' – வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும்? – மத்திய அரசின் நெறிமுறைகள்!

Date:

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு இது.

இதையொட்டி, வந்தே மாதரம் எப்படி பாடப்பட வேண்டும் என்கிற வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.

> ‘மதச்சார்ப்பற்ற தேசம்’ என்று முன்னாள் பிரதமர் நேருவின் ஆட்சிக்காலத்தில் தவிர்க்கப்பட்ட 4 சரணங்களையும் இனி சேர்த்து பாட வேண்டும்.

அதாவது வந்தே மாதரத்தில் உள்ள 6 சரணங்களும் அப்படியே பாடப்பட வேண்டும்.

> எங்குத் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் ஒன்றாகப் பாடப்பட்டாலும், தேசிய கீதத்திற்கு முன்பு, வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.

பங்கிம் சந்திர சாட்டர்ஜி

> வந்தே மாதரத்தை 3 நிமிடங்கள் 10 நொடிகளுக்குள் பாட வேண்டும்.

> எங்குத் தேசிய பாடல் பாடப்பட்டாலும்… ஒலிக்கப்பட்டாலும், அட்டென்ஷனில் நிற்க வேண்டும். இதற்கு தியேட்டர்கள் மற்றும் செய்தி சேனல்கள் மட்டும் விதிவிலக்கு.

> ஜனாதிபதி கலந்துகொள்ளும் அனைத்து அரசு சார்ந்த மற்றும் முக்கிய நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் பாடப்பட வேண்டும்.

> அனைத்து பள்ளிகளிலும் காலை பிரேயர்களில் இந்தப் பாடல் குழுவாக பாடப்பட வேண்டும்.

> அலுவல் சாராத நிகழ்வுகளில் அமைச்சர்கள் கலந்துகொள்ளும்போதும், இந்தப் பாடல் பாடப்படலாம்.

> தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் வந்தே மாதரம் பாட வேண்டும்.

> மாநிலம் சார்ந்த அரசு நிகழ்வுகளில் கவர்னர் கலந்துகொள்ளும் போது, வந்தே மாதரம் பாட வேண்டும்.

> ஆகாஷவாணி மற்றும் தூர்தர்ஷனில், ஜனாதிபதியின் பேச்சிற்கு முன் அல்லது பின், வந்தே மாதரம் பாடப்பட வேண்டும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஒத்துவராது, ஆனால்.!' – காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து ஸ்டாலின்

'India Today' ஊடகத்தின் கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டிருக்கிறார். அவரிடம்...

"தவெகவினர் மீது நாங்கள் தாக்குதல் நடத்தினோமா? நடந்தது இதுதான்"- அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

துறைமுகம் தொகுதியில் கருத்துக்கணிப்புக்காக சென்ற தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலில்...

`ஆசிரியையின் ரூ.74 லட்ச சம்பளம்; திரும்ப செலுத்த சொன்ன கல்வித்துறை' – ரத்து செய்த உயர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மார்கரெட் விமலி என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு அரூரிலுள்ள...