27
March, 2026

A News 365Times Venture

27
Friday
March, 2026

A News 365Times Venture

நாமக்கல்: `பட்டியல் மற்றும் பிற சமூக குழந்தைகளுக்கு தனித்தனி அங்கன்வாடி மையங்கள்!'- அண்ணாமலை கண்டனம்

Date:

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியம், காக்காவேரி ஊராட்சி புதுகாலனியில் பட்டியல் சமூக குழந்தைகளுக்குத் தனியாகவும், பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்குத் தனியாகவும் பல ஆண்டுகளாக இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இதைக் கண்டித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நாமக்கல்லில் உள்ள அங்கன்வாடி மையங்கள்

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “21ஆம் நூற்றாண்டில் கூட, இப்படி ஜாதிப் பாகுபாடு நடைபெறுவது வெட்கக்கேடு. ஏதுமறியா குழந்தைகளிடம், பிரிவினையை விதைக்கும் இந்த செயல், அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைக்கு அவமானச் சின்னம். இத்தனை ஆண்டுகளாக இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, அரசின் முழுமையான தோல்வி.

உடனடியாக இந்த பிரிவினை முறையை நிறுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் சம உரிமையுடன் ஒரே அங்கன்வாடியில் கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அவிநாசி: எல்.முருகனைக் களமிறக்கி துணை முதல்வருக்கு காய் நகர்த்தும் பா‌ஜக? பின்னணி என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள்...

தவெக: 234 வேட்பாளர்களையும் இறுதி செய்த விஜய்; நாளை வேட்பாளர் பட்டியல் வெளியீடு?

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தவெகவின் வேட்பாளர் பட்டியலை விஜய் இன்று இறுதி...

TVK: '5 பாயின்ட்டுகள்… 47 கி.மீ., பயணம்!' – சென்னையில் விஜய்யின் பிரசார திட்டம் என்ன?

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள்...

தஞ்சாவூர் தொகுதி பாஜக-வுக்கு.! `5 வருட நம்பிக்கைக்கு கிடைத்த ஏமாற்றம்' – அதிமுகவினர் ஆதங்கம்!

அதிமுக-வில் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருப்பவர் என்.எஸ்.சரவணன். தஞ்சாவூர் தொகுதி வேட்பாளராக...