13
February, 2026

A News 365Times Venture

13
Friday
February, 2026

A News 365Times Venture

நாடாளுமன்ற உரை: "கூட்டணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும்; ஆனால்" – எம்பி கமல்ஹாசன்

Date:

பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், பா.ஜ.க-வையும் அதில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், அது குறித்து வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் பேசியது புரியவே இல்லை. அதனால்தான் கோவை மக்கள் அவரைத் திருப்பி அனுப்பினார்கள்” எனத் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பா.ஜ.க-வினர் கமல்ஹாசனை விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி கமல்ஹாசன், “தமிழனாக நான் நல்ல கருத்துப் பேசிவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

கமல் ஹாசன்

அதை மறுப்பவர்கள் அதை விவாதிக்க வேண்டும். விவாதித்து உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஜனநாயக நாடு, இப்படித்தான் இருக்கும். விவாதங்கள் தொடர வேண்டும்.

எங்களின் கட்சிகளுடன் அல்ல… மொத்த இந்தியாவுடன். இந்தியாதான் என்னுடைய நலன், உங்களுடைய நலனும் கூட. கூட்டணி எல்லாம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். ஆனால், கொள்கைதான் முக்கியம். அதை நோக்கித்தான் என் பயணம். என் பேச்சு புரியவில்லை என்பவர்களுக்கு பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். அதுதான் இப்போது விமர்சிப்பவர்களுக்கும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜய் : 'இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன?' | மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்...

TVK: விஜய்யின் சேலம் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். சேலம், சீலநாயக்கன்பட்டியில்...

`ஸ்டாலினுக்குத் தோல்வி பயம்; வாக்குக்காக உரிமைத்தொகையை முன்பணமாகக் கொடுக்கிறார்’ – எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள்...

ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக் vs தேர்தலுக்கான லஞ்சம் பத்திரிகையாளர்களின் பார்வையில் மகளிருக்கு ரூ.5000

முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம்...