24
April, 2025

A News 365Times Venture

24
Thursday
April, 2025

A News 365Times Venture

'நாங்களும் தயார்' – பாகிஸ்தான் உத்தரவை அடுத்து இந்தியா நடத்தி முடித்த ஏவுகணை சோதனை

Date:

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி தந்தே ஆக வேண்டும் எனவும், முப்படைகளை தயாராக இருக்கவும் உத்தரவிட்டுள்ளது இந்திய அரசு.

இந்த நிலையில், பாகிஸ்தான் கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, ‘பாகிஸ்தான் போருக்கு தயாராகிறதோ?’ என்கிற சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

இந்திய கடற்படை

ஏவுகணையின் சிறப்பு

‘எதற்கும் தயார்’ என்பது மாதிரி, தற்போது இந்தியாவும் அரேபிய கடலில் ஏவுகணை சோதனை நடத்தி முடித்துள்ளது. இது கடல்சார் இலக்குகளை துல்லியமாக குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனை ஆகும். இதில் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.

இந்த ஏவுகணை இஸ்ரேலுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது ஆகும். இது 70 கி.மீ தூரம் வரைக்கும் இடைமறித்து துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டது ஆகும்.

இந்திய கடற்படையின் கருத்து

இதுக்குறித்து இந்திய கடற்படை, “இந்திய கடற்படையின் ஐ.என்.என்.எஸ் சூரத் கப்பலில் இருந்து கடல்சார் இலக்குகளை துல்லியாமாகக் குறி வைத்து தாக்கும் ஏவுகணையின் சோதனை வெர்றிகரமாக முடித்துள்ளது.

இது நமது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் மற்றொரு மைல்கல்” என்று கூறியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் உலகின் ‘இன்னொரு போரா இது?’ என்ற பதற்றத்தை கிளப்பியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“காஷ்மீர் தாக்குதலை பீகார் தேர்தல் பரப்புரைக்கு மோடி பயன்படுத்துகிறார்'' – திருமாவளவன் விமர்சனம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன், பிரதமர் தீவிரவாத தாக்குதல் நடந்த...

சர்வதேச எல்லையைத் தாண்டிய இந்திய BSF அதிகாரி; சிறைபிடித்த பாகிஸ்தான் ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்...

Boycott Prabhas Movie Issue: “நான் பாகிஸ்தானி இல்லை..'' – பிரபாஸ் பட நடிகை இமான்வி விளக்கம்

காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது....

Pahalgam Attack: “கார்கில் முதல் கன்னியாகுமரி வரை துக்கமும் ஆத்திரமும் நிறைந்திருக்கிறது" – மோடி

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்தியத் துப்பாக்கிச் சூடு சம்பவம்...