23
March, 2026

A News 365Times Venture

23
Monday
March, 2026

A News 365Times Venture

தொகுதி மாறும் அமைச்சரின் மகன்; வலுப்பெறும் அதிமுக! – திண்டுக்கல் மாவட்டத்தில் முந்துவது யார்?

Date:

முந்துவது யார்?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போதைய நிலவரப்படி, யார் களத்தில் முந்துகிறார்கள் என்பது குறித்து விவரிக்கும் பக்கம் தான் `முந்துவது யார்?’

1. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளில், பரப்பளவில் மிகச் சிறிய தொகுதியான திண்டுக்கல் தொகுதியில், விவசாயம், பூட்டுத் தயாரிப்பு, தோல் பதனிடும் தொழில்கள் ஆகியவைதான் பிரதானம். 

தொகுதியில், பிள்ளைமார், வன்னியர், இஸ்லாமியர் சமூகத்தினரே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தினர், நாயுடு, செளராஷ்டிரா சமூகத்தினரும் கணிசமாக இருக்கின்றனர். அ.தி.மு.க-வில், இந்த முறையும் சீனிவாசனுக்குத்தான் சீட் என்கிறார்கள். தி.மு.க-வில், இந்த முறை திண்டுக்கல் தொகுதியை கைப்பற்ற வேண்டுமென நினைக்கிறது.

திண்டுக்கல் சீனிவாசன்

அதோடு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு டஃப் கொடுக்கும் வேட்பாளரை களமிறக்கினால் மட்டுமே திண்டுக்கல் தொகுதியை கைப்பற்ற முடியும் என்பதால் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி எம்.எல்.ஏ-வுமான ஐ.பி.செந்தில்குமார் இந்த தொகுதியில் களமிறங்க போவதாக கூறப்படுகிறது.

ஐ.பி.செந்தில்குமார்

அதேசமயம், கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் வெள்ளிமலையும் சீட் ரேஸில் இருக்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் க.முத்தரசி என்பவர் போட்டியிடுகிறார். தவெக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தர்மர் என்பவர் சீட் கேட்கிறார்.

தற்போதைய சூழலில், திண்டுக்கல் தொகுதியில் கடுமையான போட்டி நிலவி வருகிறது!

2. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி

பசுமை போர்த்திய வயல்வெளிகளும், தென்னிந்தியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டும் அமைந்திருக்கும் தொகுதி ஒட்டன்சத்திரம். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள இந்த தொகுதியில், வெங்காயம், மிளகாய், தக்காளி, முருங்கை, பீன்ஸ், கண்வலிக்கிழங்கு, நெல், கரும்பு, மக்காச்சோளம் என்று விவசாயத்தை நம்பி ஏராளமானோர் வாழ்வாதாரத்தை அமைத்திருக்கின்றனர். 

அமைச்சர் சக்கரபாணி

தொகுதியில், கவுண்டர் சமூக மக்கள் பெரும்பான்மையாகவும், அதற்கடுத்த எண்ணிக்கையில் பட்டியல் சமூகம், பழங்குடியினர், நாயக்கர், தேவர், செட்டியார் சமூகத்தினர் பரவலாகவும் வசித்துவருகின்றனர்.

தி.மு.க-வில், மீண்டும் அமைச்சர்  சக்கரபாணிக்கே சீட் உறுதி என்கிறார்கள். அ.தி.மு.க-வில், கடந்த முறை போட்டியிட்ட என்.பி.நடராஜன் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அதேசமயம், ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் எஸ்.நடராஜன், மாவட்டப் பொருளாளர் பழனிவேல், முன்னாள் வாரியத் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோரும் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரகுபதி

நீண்டகாலமாக கல் குவாரிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் ரகுபதி என்பவர் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்குகிறார். தற்போதைய சூழலில், சக்கரபாணியின் தனிப்பட்ட செல்வாக்கு, கட்சிக் கட்டமைப்பு உள்ளிட்ட விஷயங்களால், தொகுதியில் தி.மு.க-வே முன்னிலையில் இருக்கிறது!

3. பழனி சட்டமன்ற தொகுதி

முருகனின் படைவீடுகளில் ஒன்றான பழனிமலை முருகன் கோயில், குளுகுளு கொடைக்கானல் என தமிழகத்தின் முக்கியமான லேண்ட் மார்க்குகள் அமைந்திருக்கும் தொகுதி பழனி.  இந்த தொகுதியை தனி மாவட்டமாக்கி அதை தன் பொறுப்பில் கொண்டு வர வேண்டுமென அமைச்சர் சக்கரபாணி தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.

ரவி மனோகரன், அதிமுக

தொகுதியில், தேவேந்திர குல வேளாளர், கவுண்டர், பிள்ளைமார் சமூகத்தினர் பெரும்பான்மையாகவும், கள்ளர், நாயுடு சமூகத்தினர் பரவலாகவும் இருக்கின்றனர்.

தி.மு.க-வில், சிட்டிங் எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் தொகுதி மாறுவதாகப் பேச்சு அடிபடுகிறது. அப்படி அவர் தொகுதி மாறினால், நகரச் செயலாளர் வேலுமணி, சிவகிரிபட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் மாரியப்பன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விருப்ப தொகுதி பட்டியலில் பழனியையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வில், கடந்த முறை போட்டியிட்ட ரவி மனோகரன் மீண்டும் சீட் கேட்கிறார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முருகேசுவரி

அதேசமயம், பண்ணாரி ராஜா, ராஜா முகமது ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. பா.ஜ.க-வுக்கு இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டால், கனகராஜ் என்பவருக்கு சீட் கிடைக்கலாம். நாம் தமிழர் கட்சி சார்பில் பழங்குடியினத்தவரான முருகேசுவரி வேட்பாளாராக களமிறங்குகிறார். தற்போதைய சூழ்நிலையில், கட்சிக் கட்டமைப்பு வலுவாக இருப்பதால், தி.மு.க வெற்றி பெறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்!

4. நத்தம் சட்டமன்ற தொகுதி

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் சட்டமன்றத் தொகுதி கரந்தமலை, சிறுமலை உள்ளிட்ட மலைப் பகுதிகளைக்கொண்ட தொகுதியாக இருக்கிறது. மா, தென்னை, புளி விவசாயத்தை நம்பியும், ஆயத்த ஆடைத் தொழிலை நம்பியும் ஏராளமானோர் இருக்கின்றனர். 

நத்தம் விசுவநாதன்

தொகுதியில், முத்தரையர் சமூகத்தினர் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறார்கள். அதற்கடுத்து பட்டியல் சமூகத்தினர், தேவர், மணியக்காரர், பிள்ளைமார், நாயுடு, விஸ்வகர்மா மற்றும் இஸ்லாமிய சமூகத்தினர் கணிசமான அளவில் பரவி வாழ்கிறார்கள்.

அ.தி.மு.க-வில் இந்த முறையும் நத்தம் விசுவநாதனுக்கு சீட் உறுதி என்கிறார்கள். தி.மு.க-வில், கடந்த தேர்தலில் போட்டியிட்ட எம்.ஏ.ஆண்டி அம்பலம் மீண்டும் சீட் கேட்கிறார். அதேசமயம், நத்தம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ரத்தினக்குமார், மாவட்ட பொருளாளர் விஜயன் என்பவரும் சீட் கேட்கிறார். மேற்கு ஒன்றியச் செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா ஆகியோரும் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள்

எம்.ஏ.ஆண்டி அம்பலம்

நாம் தமிழர் கட்சி சார்பில் அ.அழகம்மாள் என்பவர் போட்டியிடுகிறார். தவெக சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மலகுமார்,  தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் எஸ். சந்தோஷ்குமார் ஆகியோர் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்கள்.  தற்போதைய சூழலில், கட்சியின் கட்டமைப்பு வலுவாக இருப்பதால் அ.தி.மு.க-வே தொகுதியில் முந்தி நிற்கிறது!

5. நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டைத் தொகுதியில், பூ சாகுபடிதான் பிரதானம். ரோஜா, முல்லை, கனகாம்பரம், செண்டு மல்லி எனப் பல்வேறு வகையான பூக்கள் சாகுபடியில் அதிக அளவு விவசாயிகள் ஈடுபட்டிருக்கின்றனர். தொகுதியில் இரண்டு தனியார் வாசனைத் திரவியத் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. 

நிலக்கோட்டை எம்எல்ஏ. தேன்மொழி

தொகுதியில், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அதற்கடுத்து முக்குலத்தோர், நாயக்கர், கவுண்டர், பிள்ளைமார், நாடார் சமூக மக்களும், இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் பரவலாக இருக்கின்றனர். அ.தி.மு.க-வில் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார் சிட்டிங் எம்.எல்.ஏ தேன்மொழி. ஆத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் கோபி சீட் பெற முயற்சித்து வருகிறார்.

தி.மு.கவின் கூட்டணி கட்சியான மக்கள் விடுதலை கழகம் சார்பில் கடந்த முறை போட்டியிட்ட முருகவேல் ராஜன் மீண்டும் சீட் கேட்கிறார். 2019-ல் இடைத்தேர்தல் வேட்பாளராகக் களமிறங்கிய சவுந்தரபாண்டியன் சீட் கேட்கிறார். மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால் பாண்டியனின் மனைவி சுகந்தா, நிலக்கோட்டை பேருராட்சி தலைவர் முருகேசனின் மனைவி தெய்வானை ஆகியோரும் சீட்டிற்கான ரேஸில் இருக்கிறார்கள்.

முருகவேல் ராஜன்

விசிகவினரும் தொகுதியை கேட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் துரை. கயிலை ராஜன் வேட்பாளாராக களமிறங்குகிறார்.  தொகுதியின் எம்எல்ஏவாக அதிமுகவை சேர்ந்த எஸ்.தேன்மொழி இருக்கிறார். ஆனால் இவருடைய கணவர் சேகர் என்பவர் தான் எம்எல்ஏவின் பணிகளை எல்லாம் கவனித்து வருகிறார். இதனால் தொகுதி மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இதனால் தொகுதியில் கடும் போட்டி நிலவி வருகிறது!

6. வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி

வேடசந்தூர் தொகுதி அதிக கிராமங்கள் கொண்ட பகுதியாகவும்,  விவசாயமும், கால்நடை வளர்ப்பும் இங்கு பிரதான தொழிலாக உள்ளது. தக்காளி, வெங்காயம் அதிகளவு விளைச்சல் உள்ள பகுதி. இதற்கு அடுத்தபடியாக இத்தொகுதியில் அதிக அளவு நூற்பாலைகள் உள்ளன.

வேடசந்தூர் தி.மு.க எம்.எல்.ஏ காந்திராஜன்

இங்கு ஒக்கலிகவுடர் சமூகத்தினர்  வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சமூகமாக  உள்ளனர். அடுத்து பிள்ளைமார்,  கவுண்டர், நாயுடு ஆகிய சமூகங்கள் கணிசமான அளவிலும் இஸ்லாமிய சமூகத்தினர், வன்னியர்,  முக்குலத்தோர்,  ஆதிதிராவிடர், நாடார், ஆசாரி, செட்டியார், யாதவர், அம்பலக்காரார், ஆகிய சமூகங்கள் கிராமங்களில் ஆங்காங்கே இருக்கிறார்கள்.

வி.பி.பி.பரமசிவம். அதிமுக

தி.மு.கவை பொறுத்தமட்டில் காந்திராஜன் சீட் பெரும் முயற்சியில் இருக்கிறார் . வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதனும் சீட் கேட்கிறார். கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் என்பவர் சீட் கேட்கிறார்.  காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கபட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அ,தி.மு.க-வில் கடந்த முறை போட்டியிட்ட வி.பி.பி. பரமசிவம் இந்த முறையும் சீட் கேட்கிறார். டப் ஃபைட் கொடுக்க கூடிய வேட்பாளராக பரமசிவம் தான் இருக்கிறார். இது தவிர  முன்னாள் எம்எல்ஏ தென்னம்பட்டி பழனிசாமி. குஜிலியாம்பாறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன் ஆகியோரும் சீட் பெரும் முனைப்பில் இருக்கிறார்கள்.

அதிமுக இந்த முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

7. ஆத்தூர் சட்டமன்ற தொகுதி

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி மலைகள் அதிகமாக உள்ள பகுதியாக உள்ளது. காமராஜர் அணை மற்றும் மருதாநதி அணைகள்  இருப்பதால் விவசாயமே முக்கிய தொழிலாக இருக்கிறது. தென்னை, நெல் விவசாயம் அதிகளவில் நடக்கிறது

ஐ.பெரியசாமி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

தொகுதிக்குள் ஒக்கலிக்க கவுண்டர்,  பிள்ளைமார்,  ஆதிதிராவிடர், செட்டியார், வன்னியர், முக்குலத்தோர் சமூகங்கள் பரவலாக வசித்து வருகின்றனர். திமுகவை பொறுத்தவரை  ஐ. பெரியசாமிக்கு தான் மீண்டும் சீட் . கடந்த காலங்களில் அதிமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளுக்கு தான் இந்த தொகுதியை ஒதுக்கியுள்ளது.

திலகபாமா

இந்த முறை அதிமுகவில் சிவராமன் என்பவர் சீட் கேட்கிறார். கூட்டணி கட்சி சார்பில் பாமகாவை சேர்ந்த திலகபாமாவே திரும்பவும் நிற்பதற்கான வாய்ப்புகளே அதிகம். அமைச்சர் ஐ. பெரியசாமியின் செல்வாக்கினால் தொகுதியில் திமுகவே முந்தி நிற்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

போயஸ் தோட்டத்தின் செல்லப்பிள்ளை TTV தினகரனின் முதல் தேர்தலும் ஆச்சரியங்களும்!  | முதல் களம் 11

டி.டி.வி.தினகரன்முதல் களம் 11ஓர் இடைத்தேர்தலில் வழக்கமாக என்னவெல்லாம் நடக்கும்? அந்த நேரத்து...

புதுச்சேரி: `சீட் இல்லை!’ – கை விரித்த காங்கிரஸ்; அதிர்ச்சியில் நாராயணசாமி

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. என்.டி.ஏ...

"அனைவரும் திருப்தியடையும் வகையில் எங்களின் தொகுதி பங்கீடு இருக்கும்!"- பியூஸ் கோயல்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. கட்சிகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நடத்தி...

பத்மநாபபுரம்: `தொகுதியை சேர்ந்தவருக்கு சீட் வழங்க வேண்டும்' மனோ தங்கராஜுக்கு எதிராகும் நிர்வாகிகள்?

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிதான் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ-வாக...