15
February, 2026

A News 365Times Venture

15
Sunday
February, 2026

A News 365Times Venture

தொகுதி பங்கீடு: "மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம்" – கொதிக்கும் மாணிக்கம் தாகூர்

Date:

மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணியில் கூடுதல் தொகுதி ஒதுக்கீடு, கேட்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

மாணிக்கம் தாகூர்

மேலும், இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்தும் பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், “உண்மையாக பாஜகவை எதிர்க்கக்கூடிய தைரியமும் தில்லும் காங்கிரஸாருக்கு மட்டும்தான் இருக்கின்றன.

மோடி அரசு ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆனது 8 பேர். அதில் 7 பேர் காங்கிரஸ். ஒரு ஆள் சிபிஎம். பாராளுமன்றத்தில் யார் பலமாகச் சண்டையிடுகிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

துணை நிற்கிறோம்.. துணை நிற்கிறோம் என்றவர்கள் ஏன் சஸ்பெண்ட் ஆகாமல் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சைடு வாங்கிக்கொண்டுப் போய் வணக்கம் சொல்லக்கூடிய பழக்கம் காங்கிரஸ்காரனுக்குக் கிடையவே கிடையாது.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ்தான் என் உயிர். மரியாதை, அன்புதான் கேட்கிறோம்.

காங்கிரஸைச் சாதாரணமாக நினைத்துப் பேசுகின்றனர். மரியாதை தராவிட்டால் திருப்பி அடிப்போம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.

நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான்” எனக் கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"திமுக-வுக்கு அது வெற்றியைத் தரும் என்று நம்புவது மூடநம்பிக்கை" – பிரவீன் சக்கரவர்த்தி சொல்வது என்ன?

தேர்தல் நெருங்கி வருவதால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் கூட்டணி குறித்து...

இலவச சட்ட சேவை பெறும் உரிமை எல்லோருக்கும் உண்டு; ஆனால் எப்படி? | How To?

'நீதிமன்றம்' என்பது பொதுவானதுதான் என்றாலும், அதன் வாசல் ஏறி நீதி கோருவதற்கு...

உக்ரைன் – ரஷ்யா: "20 வருடங்கள் அமெரிக்கா பாதுகாப்பு தர வேண்டும்" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்துவரும் போர் முக்கியக் கட்டத்தை எட்டியிருக்கிறது....