12
April, 2026

A News 365Times Venture

12
Sunday
April, 2026

A News 365Times Venture

திருவள்ளூர்: "விஜய் ஒரு நல்ல நடிகர்; அவ்வளவுதான் தெரியும்" – நடிகை நளினி

Date:

திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வி.ஜி. ராஜேந்திரனை ஆதரித்து, பிரபல நடிகை நளினி இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை நளினி, “அண்ணன் வி.ஜி. ராஜேந்திரன் அவர்கள் 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனப் பலர் சொல்கிறார்கள். ஆனால், அவர் செய்த நற்பணிகளுக்காக ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்று நான் நம்புகிறேன். அவர் சொன்னதை விடவும் அதிகமாக மக்களுக்காகச் செய்திருக்கிறார்.

நடிகை நளினி

நான் செல்லும் இடமெல்லாம் மக்கள் என்னை அவரின் தங்கை போலவே பாவித்து அன்புடன் வரவேற்கிறார்கள். அந்த அன்புதான் எங்களின் வெற்றியை உறுதிப்படுத்தும்” என்றார்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “அவர் ஒரு நல்ல நடிகர் என்பது மட்டுமே எனக்குத் தெரியும், மற்றபடி அவர் அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” எனச் சுருக்கமாகப் பதிலளித்தார்.

எப்போதும் அதிமுக மேடைகளில் மட்டுமே முழங்கி வந்த நடிகர் ராமராஜன், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அதிமுகவுக்காக பேசக் கிளம்புகிறாரா பழ கருப்பையா? – பின்னணி என்ன?

நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அ இ அதிமுக தலைமையிலான தேசிய...

`ஒரு பக்கம் பேச்சுவார்த்தை.. மறுபக்கம் போர்க்கப்பல்கள்' – அமெரிக்காவின் இரட்டை வியூகம் பலிக்குமா?

ஈரான் - அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த...

காரைக்குடி: சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்த தவெக தலைவர் விஜய் | Photo Album

ஜனநாயகன்: 'விஜய் சாரை கடைசி முறையாக திருவிழா போல் கொண்டாட வேண்டாமா?'-...