தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்ரமணியின் அதிரடி மாற்றத்திற்கு பின் தர்மபுரி மாவட்ட திமுக அரசியல் தலைக்கீழாக அமைந்துள்ளதாக குமுறுகின்றனர் உடன்பிறப்புக்கள்!
தமிழக முதல்வரின் குட் புக்கில் இடம்பெறாத மா.செக்களின் பதவிகள் சமீபகாலமாக பறிபோகிவருகின்றன. அந்தவகையில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டமான சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதன் எதிரொலியானது அடுத்தடுத்து இருந்து வருகின்றது.
இந்த நிலையில் தான், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் மாற்றம் நடந்தது. அதைத்தொடர்ந்து, தர்மபுரியில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணியம் மாற்றம் இருந்தது. இதில், தர்மபுரி தடங்கம் சுப்பிரமணியத்தை மாற்றி தர்மசெல்வன் என்பவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
வெளியான திமுக மா.செ-வின் ஆடியோ..
தர்மசெல்வன் பதவி ஏற்றதில் இருந்து தர்மபுரி திமுக -வுக்குள் ஏகப்பட்ட கலவரங்கள் வெடித்தவாறு உள்ளது. அதிலிலும் தர்மசெல்வன் ஏற்கெனவே கட்சியில் தலைத்தூக்கி இருக்கும் நிர்வாகிகளை எப்படி ஓரங்கட்டுவது, சாதியப்பாகுபாடு குறித்து பேசியதுடன் பதவி வழங்குவது தொடர்பாக பேசிய ஆடியோ முதலில் வெளியானது.

அதன்பின்னர் கட்சிநிர்வாகிகள் கூட்டத்தில் அதிகாரிகள் உள்பட எல்லோரும், அதாவது கலெக்டர். எஸ்.பி ஆகியோர் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் என்னை கேட்காமல் எந்தவித வேலையும் செய்யக்கூடாது என பேசிய ஆடியோ, காணொலி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்..
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி திமுக மா.செ-வின் அதிகார பேச்சினைக் கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “திமுக தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்பட ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மிரட்டல் விடுத்ததாக செய்திகள் வருகின்றன. தர்மபுரியில் மட்டுமல்ல இதுபோன்ற மிரட்டல்கள் திமுகவினரால் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருவதன் எடுத்துக்காட்டு தான் இது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியில் திமுக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் குறுநில மன்னர்கள் போல் செயல்படுவதும், அரசு அதிகாரிகளை மிரட்டி தங்கள் ஏவலுக்கு அடிபணிய வைப்பதும் கடும் கண்டனத்திற்குரியது. திமுகவினரின் மிரட்டலால் அரசு அதிகாரிகள் மன அழுத்தத்தினாலும் வேதனையிலும் சோர்வுற்று இருப்பதை உணர முடிகிறது. மேலும் இந்த ஆட்சியில் அதிகாரிகள் அத்துமீறுவதும், காவல்துறை ஏவல்துறையாக மாறியிருப்பதும் இத்தகைய அழுத்தத்தால் தானா என்ற கேள்விக்கு இதுவே பதிலாகவும் அமைந்துள்ளது.
ஆட்சியரையே மிரட்டத் துணிந்தவர்கள், சாமானிய மக்களை எத்தகைய இன்னலுக்கு ஆளாக்குவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அரசு அதிகாரிகளையும், மக்களையும் வஞ்சிக்கும் இந்த காட்டாட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பதே இதற்கு தீர்வாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தர்மபுரி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
