14
April, 2026

A News 365Times Venture

14
Tuesday
April, 2026

A News 365Times Venture

`திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்' – மு.க.ஸ்டாலின் அதிரடி

Date:

தமிழ்நாடு அமைச்சர் பொன்முடியை அவர் வகித்த கட்சி பதவியில் இருந்து விலக்கியுள்ளது திமுகவின் தலைமை கழகம்.

பொன்முடி பேசியது என்ன?

சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அருவருக்கத்தக்க வகையில் அமைச்சர் பொன்முடி பேசிய வீடியோ வைரல் ஆனது. பெண்கள், சைவம் மற்றும் வைணவம் குறித்து கொச்சையாக பேசியிருந்தார்.

இந்த வீடியோ வேகமாக பரவ, பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், சொந்தக் கட்சியை சேர்ந்த எம்.பி கனிமொழியும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் கண்டனம்

கனிமொழியின் பதிவு

பொன்முடியின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கனிமொழி தனது எக்ஸ் தளத்தில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பும் இலவச பேருந்து திட்டத்தின் மூலம் பெண்கள் பயணிப்பதை ‘ஓசி டிக்கெட்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இவரது சர்ச்சை பேச்சுகள் இன்னமும் தொடர்ந்துகொண்டே வருகின்றன.

இந்த நிலையில், தற்போது பொன்முடியை கழக துணைப் பொதுச்செயலாளர் என்னும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலக்கியுள்ளது திமுகவின் தலைமைக் கழகம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`8,000 ரூபாய் கூப்பனில் என்ன வாங்கப் போகிறீர்கள்?’ – வீட்டுக்குள் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் நேற்று இரவு தேர்தல் பரப்புரையை...

“திருமாவளவன் முதல்வர் ஆக வேண்டும் என மக்கள் சொல்லும் காலம் வரும்” – திருமா அதிரடி

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது....

’அண்ணனைத் தொடர்ந்து களத்திற்கு வந்த தம்பி’ – வானதி சீனிவாசனுக்காக வாக்கு சேகரிக்கும் மகன்கள்

கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனுக்குத் தேர்தல் பரப்புரையின்...

"தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் என்றவர்தான் பொன்.ராதாகிருஷ்ணன்"- கனிமொழி கடும் தாக்கு!

கன்னியாகுமரி தொகுதி தி.மு.க வேட்பாளர் மகேஷ், நாகர்கோவில் தி.மு.க வேட்பாளர் ஆஸ்டின்,...